Header Logo
Vallibel FD
Selan Bank
பல்சுவை
திருமணத்தை மீறிய உறவு - மது குடித்த கணவனுக்கு காத்திருந்த ஷாக்!

May 26, 2026 - 06:36 PM

திருமணத்தை மீறிய உறவு - மது குடித்த கணவனுக்கு காத்திருந்த ஷாக்!
Mobitel Inner 1278

இந்தியாவின் தெலங்கானாவில் திருமணத்தை மீறிய உறவுக்கு தடையாக இருந்த கணவனை கொலை செய்து குழி தோண்டி மனைவி புதைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

தெலங்கானா மாநிலம் சங்கா ரெட்டி மாவட்டம் நாராயணகேட் பகுதியை சேர்ந்தவர்கள் முத்தியம் - கல்பனா தம்பதி. இவர்களுக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், 11 வயதில் ஒரு மகனும், 9 வயதில் மகளும் உள்ளனர். தனக்கு சொந்தமான நிலத்தில் முத்தியம் விவசாயம் செய்து வந்துள்ளார். மேலும் நாராயணகேட்டில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் கல்பனா செவிலியராகப் பணிபுரிந்து வந்தார். 

இந்த நிலையில் கல்பனாவிற்கு அதே வைத்தியசாலையில் பணியில் இருந்த மனூரு மண்டலம் எல்கோயி கிராமத்தைச் சேர்ந்த சிண்டூ என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்தப் பழக்கம் இருவருக்கும் இடையே திருமணத்திற்கு புறம்பான உறவாக மாறி உள்ளது. மருத்துவமனைக்கு சென்று ஒவ்வொரு நாளும் காதலனுடன் நேரத்தைச் செலவழித்துவிட்டு கல்பனா வீட்டுக்கு தாமதமாக வந்துள்ளார். 

வீட்டில் இருந்தாலும் அடிக்கடி தொலைபேசியில் நேரத்தைச் செலவழித்து இருக்கிறார். மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவன் முத்தியம், மனைவியுடன் அடிக்கடி சண்டை போட்டு இருக்கிறார். தங்கள் உறவுக்கு கணவன் முத்தியம் தடையாக இருப்பதாக நினைத்த கல்பனா, காதலன் சிண்டூவுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். 

கொலை திட்டத்தின்படி கடந்த 16 ஆம் திகதி இரவு, கணவனுக்கு அதிக அளவில் கல்பனா மதுவை ஊற்றிக் கொடுத்து குடிக்க வைத்து இருக்கிறார். 

அதன்படி போதையில் முத்தியம் தூங்கிய பிறகு, காதலன் சிண்டூவை வீட்டிற்கு வரவழைத்து இருக்கிறார். அதன்பிறகு இருவரும் சேர்ந்து முத்தியம் ரெட்டியின் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். பின்னர் கிராமத்தின் எல்லையில் உள்ள தங்கள் விவசாய நிலத்திற்கு உடலை எடுத்துச் சென்று மண் அள்ளும் இயந்திரம் மூலம் பெரிய குழி தோண்டி புதைத்து விட்டனர். 

மேலும் அந்த இடத்தில் கற்களைப் போட்டு குழி தோண்டப்பட்ட அடையாளம் தெரியாமல் செய்து விட்டனர். இரு நாட்கள் கடந்த நிலையில் கணவன் காணாமல் போய்விட்டதாக முத்தியம் ரெட்டியின் பெற்றோருக்கும், கிராம மக்களுக்கும் கல்பனா தெரிவித்து இருக்கிறார். பின்னர் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்ய, வழக்குப் பதிவு செய்த பொலிஸார் விசாரணையைத் தொடங்கினர். 

வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், கல்பனாவின் நடத்தையில் சந்தேகம் அடைந்த பொலிஸார், அவருடைய நடவடிக்கைகளை கண்காணிப்பில் வைத்தனர். அப்போது அவர் அடிக்கடி தனது காதலன் சிண்டூவிற்கு போன் செய்வது தெரிந்தது. 

சந்தேகம் அடைந்த பொலிஸார் இரண்டு பேரையும் பிடித்து தனித்தனியாக விசாரிக்க உண்மை வெளிவந்துள்ளது. சிறந்த வீடியோக்கள் 

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விவசாய நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த முத்தியம் ரெட்டியின் உடலை தோண்டி எடுத்தனர். பின்னர் தாசில்தார் முன்னிலையில் அங்கேயே உடற்கூறு ஆய்வு நடத்தி, குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைத்தனர். 

கல்பனா, சிண்டூ ஆகியோரை கைது செய்த பொலிஸார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ
09
ரூ. 40 பில்லியன் அரசாங்க வருமானக் கசிவு தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும், வாகனத் துறையிலுள்ள அனைத்து இறக்குமதியாளர்களுக்கும் சீரான வரி அமைப்பை ஏற்படு

ரூ. 40 பில்லியன் அரசாங்க வருமானக் கசிவு தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும், வாகனத் துறையிலுள்ள அனைத்து இறக்குமதியாளர்களுக்கும் சீரான வரி அமைப்பை ஏற்படு

Sep 21, 2026 - 11:49 AM


காணொளி
மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

Mobitel 1278