Header Logo
Mogo Academy

செய்திகள்
ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெறும் அரச வெசாக் விழா!

May 27, 2026 - 09:48 AM -

0

ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெறும் அரச வெசாக் விழா!
Mobitel inner

இலங்கை வாழ் பௌத்தர்களின் புனிதமிக்க வெசாக் பண்டிகையை முன்னிட்டு, இன்று (27) முதல் ஜூன் 02 ஆம் திகதி வரை 'வெசாக் வாரம்' பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.


சமஸ்த லங்கா சாசனாரக்ஷக மண்டலத்தின் வழிகாட்டலின் கீழ், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, பௌத்த விவகாரத் திணைக்களம் மற்றும் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர் அலுவலகங்கள் உள்ளிட்ட அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் நாடு தழுவிய ரீதியில் வெசாக் விழாக்களை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

இதற்கமைய, இவ்வருடத்திற்கான அரச வெசாக் விழா, மாத்தறை, திஹகொடை, மிதெல்லவல விகாரையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.


இதேவேளை, நாடு முழுவதும் வெசாக் நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் குறித்து கலாநிதி ஹினிதும சுனில் செனெவி பின்வருமாறு விளக்கமளித்தார்:


"வெசாக் நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்களிடம் நாங்கள் கேட்டுக்கொள்வது என்னவென்றால், இது தொடர்பான வழிகாட்டல்கள் அடங்கிய சுற்றறிக்கையில் செய்ய வேண்டிய விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் பேய் மாளிகைகள் மற்றும் விசித்திரமான நடனங்கள் போன்றவை சேர்க்கப்பட்டிருந்தன. மற்றொன்று, பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்குமாறு அல்லது முற்றாகத் தவிர்க்குமாறு வழிகாட்டல் வழங்கப்பட்டுள்ளது. செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து பொலிஸாருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன."


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara