Header Logo
Mogo Academy

சினிமா
கடவுளை கிண்டல் செய்த விவகாரம்!

May 27, 2026 - 11:31 AM -

0

கடவுளை கிண்டல் செய்த விவகாரம்!
Mobitel inner

உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், கர்நாடக மாநிலம், மைசூருவில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலில் இந்தி நடிகர் ரன்வீர் சிங் சாமி தரிசனம் மேற்கொண்டார். 

கடந்தாண்டு நவம்பர் மாதம் கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டார் நடிகர் ரன்வீர் சிங். 

அப்போது ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ‘காந்தாரா’ படத்தில் வரும் "தெய்வா" கடவுள் முகபாவனைகளை கிண்டல் செய்தார். குறிப்பாக, அந்த கடவுள் பேய் என்று கூறியிருந்தார். 

இதற்கு தெய்வா கடவுளை வணங்கி வரும் துளு மொழி பேசும் மக்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். “ரிஷப் ஷெட்டியின் அபாரமான நடிப்பை முன்னிலைப்படுத்துவதே எனது நோக்கமாக இருந்தது. நான் எப்போதும் ஒவ்வொரு கலாச்சாரத்தையும், சம்பிரதாயத்தையும் மதிப்பவன். எனது செயல் யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால், அதற்காக நான் உளமார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.” என்று மன்னிப்பு கோரினார் ரன்வீர் சிங். 

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ரன்வீர் சிங் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். இதனை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம், மக்களின் ஆன்மீக நம்பிக்கையை புரிந்துக் கொள்ள மைசூரு சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு செல்லுமாறு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் மைசூரு சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு சென்ற ரன்வீர் சிங், பூஜைகள் செய்து வழிபட்டார். மேலும், சிறிது நேரம் கோயிலில் அமர்ந்து தியானம் செய்தார்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara