Header Logo
Mogo Academy

செய்திகள்
200 மெனிஞ்சைடிஸ் நோயாளிகள்! சுகாதார பிரிவு எச்சரிக்கை!

May 27, 2026 - 01:22 PM -

0

200 மெனிஞ்சைடிஸ் நோயாளிகள்! சுகாதார பிரிவு எச்சரிக்கை!
Mobitel inner

இதுவரை 200 மெனிஞ்சைடிஸ் (மூளைக்காய்ச்சல்) நோயாளிகள் பதிவாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.

இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் சமூக சுகாதார விசேட வைத்திய நிபுணர் துஷானி தாபரேரா, தற்போது நான்கு மாவட்டங்களில் 50 பேர் மாத்திரமே வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகக் குறிப்பிட்டார்.

தற்போது நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாகத் தெரிவித்த அவர், இருப்பினும் எதிர்வரும் மழைக்காலத்தில் நோய் பரவும் அபாயம் காணப்படுவதால், மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும், கொதிக்க வைத்து ஆறவைத்த நீரைப் பருகுவது மிகவும் அவசியம் என்றும், குடும்பத்தில் நோய்வாய்ப்பட்ட குழந்தை இருந்தால், அக்குழந்தையை பாடசாலைக்கு அனுப்புவதைத் தவிர்க்குமாறு பெற்றோர்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பது மிகவும் உசிதமானது என்றும் சுகாதாரப் பிரிவினர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர். தெனியாய பிரதேசத்தில் உள்ள சில பாடசாலை மாணவர்களிடையே பரவிய மெனிஞ்சைடிஸ் நோய், தற்போது மேலும் சில பிரதேசங்களிலிருந்தும் பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara