Header Logo
Mogo Academy

சினிமா
பிரபல இயக்குநர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

May 29, 2026 - 02:01 PM -

0

பிரபல இயக்குநர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை!
Mobitel inner

பிரபல பெங்காலி திரைப்பட இயக்குனர் அனிக் தத்தா தனது 66 வயதில் கொல்கத்தாவிலுள்ள அவர் தங்கி இருந்த ஆறு மாடி குடியிருப்பின் மேலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். 

டோவர் லேனில் வசித்து வந்த அனிக் தத்தா, நேற்று (29) மதியம் 1 மணியளவில் அவரது மனைவிக்குச் சொந்தமான பிளாட் உள்ள ஹிந்துஸ்தான் பார்க் கட்டிடத்திற்கு வந்துள்ளார். 

ஆனால், அவர் தனது மனைவியைச் சந்திக்கச் செல்லாமல் நேரடியாக மொட்டை மாடிக்குச் சென்றுள்ளார். மதியம் 1:05 மணியளவில் அவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

உடனே அவர் மீட்கப்பட்டு அருகில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். 

அவர் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மொட்டை மாடியில் இருந்து தற்கொலை குறிப்பு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அதில் தனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என்று எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் உள்ள கையெழுத்தை பொலிஸார் தற்போது சரிபார்த்து வருகின்றனர். 

அனிக் தத்தா, இதுவரை 7 திரைப்படங்களை இயக்கியுள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான இவரது முதல் நகைச்சுவைத் திரைப்படமான 'பூட்டர் பவிஷ்யத்' மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இவரது படங்களில் வரும் அரசியல் நையாண்டிகள் பிரசித்தி பெற்றவை. 

அவரின் மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara