Header Logo
Mogo Academy

சினிமா
சர்ச்சையில் சிக்கிய பூஜா ஹெக்டே

May 31, 2026 - 02:28 PM -

0

சர்ச்சையில் சிக்கிய பூஜா ஹெக்டே
Mobitel inner

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே, சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவிய ஒரு வீடியோ காரணமாக விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார். 

அவரது அடுத்த படமான 'ஹாய் ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை' திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், இந்த விவகாரம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், ரசிகர் ஒருவர் பூஜாவுடன் செல்பி எடுக்க முயன்றபோது, அவரைப் பொருட்படுத்தாமல் பூஜா கடந்து சென்றதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து, நெட்டிசன்கள் பலரும் அவரது செயலை கடுமையாக விமர்சித்தனர். 

இந்நிலையில், அந்த சர்ச்சை குறித்து பூஜா ஹெக்டே விளக்கம் அளித்துள்ளார். 

அவர் கூறுகையில், திரைத்துறையினருக்கு உயிர் கொடுப்பதே ரசிகர்கள்தான். சில நேரங்களில் அவசரமான சூழ்நிலைகள் அல்லது அதிக கூட்ட நெரிசல் காரணமாக ரசிகர்களை கவனிக்க முடியாமல் போகலாம். ஆனால் அதற்கு நாங்கள் தலைக்கனம் கொண்டவர்கள் என்று அர்த்தமல்ல என்றார். 

மேலும் பேசிய அவர், ரசிகர்கள்தான் எங்களின் பலம். எப்போதும் எங்களுக்கு தெய்வங்களை போன்றவர்கள். எனவே, இதுபோன்ற சம்பவங்களை தவறாக புரிந்துகொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். 

பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள 'ஹாய் ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை' திரைப்படம் ஜூன் 5-ம் திகதி வெளியாக உள்ளது. 

இந்தப் படத்தில் வருண் தவான், மிருணாள் தாகூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara