Header Logo

சினிமா
தனுஷிடம் கதை சொன்ன சிறுத்தை சிவா

Jun 1, 2026 - 01:43 PM -

0

தனுஷிடம் கதை சொன்ன சிறுத்தை சிவா

தனுஷை சந்தித்து கதை சொல்லியிருக்கிறாராம் சிறுத்தை சிவா. அந்த கதையில் சில திருத்தங்களை செய்யுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறாராம் தனுஷ். தனுஷ் சொன்னதை வைத்து கதையை மாற்றிக் கொண்டிருக்கிறாராம் சிவா. 

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர படம் இன்று நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியிருக்கிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான கர படத்திற்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்காமல் போனது. தமிழக அரசியலில் ஏற்பட்ட குழப்பத்தால் வந்த இடம் தெரியாமல் போய்விட்டது கர. படத்தை ரிலீஸ் செய்த நேரம் சரியில்லை. முன்னதாக கரூர் துயரத்தால் இட்லி கடை படம் பாதிக்கப்பட்டது. தற்போது கர படத்திற்கு ஆப்பு வைத்துவிட்டு அரசியில் சூழல் என்று சினிமா ரசிகர்கள் பேசுகிறார்கள். 

கர பட விழாவில் மிகவும் நம்பிக்கையுடன் பேசியிருந்தார் தனுஷ். ஆனால் அடுத்த தமிழக முதலமைச்சர் யாரென்று மக்கள் காத்திருந்த நிலையில் கர படத்தை பார்க்கத் தவறிவிட்டார்கள். இந்நிலையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் தனுஷ் என தகவல் வெளியானது. அது குறித்து அறிந்த தனுஷ் ரசிகர்களோ, சிவா உங்களுக்கு செட்டாகவே மாட்டார். உங்க தலைவர் ரஜினிகாந்த் அவர்களுக்கே சிவா சரிபட்டு வரவில்லை. அதனால் அவசரப்பட்டு சிறுத்தை சிவாவை ஓகே செய்ய வேண்டாம் அண்ணா என்றார்கள். 

ரசிகர்களின் கோரிக்கை தனுஷ் காதை எட்டிவிட்டது போன்று. இந்நிலையில் சிறுத்தை சிவா, தனுஷ் சந்திப்பு நடந்திருக்கிறது. சிவா சொன்ன ஒன்லைன் கதை தனுஷுக்கு பிடித்திருக்கிறதாம். இருந்தாலும் ஸ்க்ரிப்ட்டில் முழு திருப்தி இல்லையாம். அதனால் சில திருத்தங்களை செய்துவிட்டு வாங்க சிவா சார் என்று சொல்லியிருக்கிறாராம் தனுஷ். திருத்தப்பட்ட ஸ்க்ரிப்ட்டை பார்த்து முழு திருப்தி ஏற்பட்டால் மட்டுமே சிவா இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொள்வாராம். 

இதற்கிடையே தனுஷுக்கு அவரின் ரசிகர்கள் அறிவுரை சொல்லத் துவங்கிவிட்டார்கள். டி அண்ணா, உங்களுக்கு கமல் ஹாசன் மாதிரி ஆர்ட் படம் செட்டாகவில்லை. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாதிரி பக்கா மாஸ், கமர்ஷியல் படங்கள் தான் சரிபட்டு வரும். அதனால் கமல் வழியை விட்டுவிட்டு ரஜினிகாந்த் வழியில் சென்றால் உங்களை அசைக்க யாராலும் முடியாது என்கிறார்கள். 

சிவா இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் சூர்யாவின் கங்குவா. அந்த படம் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் அஜித் குமார் நடிக்கும் ஏ.கே. 64 படத்தை இயக்கப் போகிறார் சிவா. அவருக்கு அந்த வாய்ப்பை கொடுக்கச் சொன்னதே நண்பர் அஜித் தான் என்று தகவல் வெளியானது. விசாரித்துப் பார்த்தபோது ஏ.கே. 64 பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை என்பது தெரிய வந்தது. 

இருப்பினும் சிறுத்தை சிவாவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கும் முடிவில் இருக்கிறாராம் அஜித் குமார்.


MOST READ

காணொளி
காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

title