Header Logo
Mogo Academy

செய்திகள்
மத்திய வங்கி பிணைமுறி வழக்கு: மேல் நீதிமன்றத்தின் உத்தரவை நிராகரித்த உயர் நீதிமன்றம்

Jun 1, 2026 - 07:17 PM -

0

மத்திய வங்கி பிணைமுறி வழக்கு: மேல் நீதிமன்றத்தின் உத்தரவை நிராகரித்த உயர் நீதிமன்றம்
Mobitel inner

கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட பிணைமுறி வழங்கலின் போது, அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி, பெர்பச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனம், முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன், முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பிரதிவாதிகள் குழுவினருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின், பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுகளை அந்தப் பிரதிவாதிகளுக்கு எதிராகத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாது என கொழும்பு மூவர் அடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு பிறப்பித்திருந்த உத்தரவை உயர் நீதிமன்றம் இன்று (01) நிராகரித்துள்ளது. 

சட்டமா அதிபரால் சமர்ப்பிக்கப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரணை செய்த பின்னரே, பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன, அசல வெங்கப்புலி, அர்ஜுன ஒபயசேகர ஆகிய நீதியரசர்களின் உடன்பாட்டுடன், உயர் நீதிமன்ற நீதியரசர் மஹிந்த சமயவர்தன இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது

MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara