Header Logo
Mogo Academy

செய்திகள்
வாகன விபத்துக்களால் இரண்டு நாட்களில் 24 பேர் பலி

Jun 1, 2026 - 10:44 PM -

0

வாகன விபத்துக்களால் இரண்டு நாட்களில் 24 பேர் பலி
Mobitel inner

கடந்த 29 மற்றும் 30 ஆகிய இரு தினங்களில் இடம்பெற்ற 19 வீதி விபத்துகளில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்துப் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் அதிபர் டப்ளியூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். 

பொலிஸ் ஊடகப் பிரிவில் இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். 

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த போக்குவரத்துப் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் அதிபர் டப்ளியூ.பி.ஜே. சேனாதீர, 

"கடந்த 2 நாட்களில், அதாவது 5.29 மற்றும் 5.30 ஆகிய இரு வெசாக் தினங்களில் 19 வீதி விபத்துகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். 29 பாரதூரமான விபத்துகளும், 96 சிறு விபத்துகளும், 19 சேதங்களை ஏற்படுத்திய விபத்துகளும் பதிவாகியுள்ளன. இந்த வீதி விபத்துகளுக்கு உள்ளான வாகனங்களை எடுத்துக்கொண்டால் 15 மோட்டார் சைக்கிள்கள், 03 முச்சக்கரவண்டிகள், இரண்டு லொறிகள் உள்ளடங்குகின்றன. 

அத்துடன் இரண்டு தனியார் பேருந்துகள், 1 கெப் வாகனமும் இந்த விபத்துகளுடன் தொடர்புபட்டுள்ளன. விபத்துகளில் 13 பாதசாரிகளும், 7 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும், மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த ஒருவரும், ஒரு மிதிவண்டி ஓட்டுநரும் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு சாரதி, ஒரு பயணி என ஒட்டுமொத்தமாக 24 பேர் உயிரிழந்துள்ளனர்" என்றார்.


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara