Header Logo

சினிமா
Bigg Boss சீசன் 10 இல் காமன்மேனுக்கு கோல்டன் சான்ஸ்!

Jun 3, 2026 - 02:50 PM -

0

Bigg Boss சீசன் 10 இல் காமன்மேனுக்கு கோல்டன் சான்ஸ்!

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 10 ஆவது சீசன் இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ள நிலையில், அதற்கான புது புரோமோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. 

இந்தியாவின் நம்பர் ஒன் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ், பல மொழிகளில் ஒவ்வொரு சீசனிலும் தனது ரசிகர் பட்டாளத்தை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில், தமிழ் மற்றும் மலையாளத்தில் அடுத்த சீசனுக்கான அறிவிப்புகள் வரத் தொடங்கியுள்ளன. 

 

மலையாளத்தில் 11 நாட்களுக்கு முன்பு ஒரு முக்கிய அறிவிப்பு வந்த நிலையில், தமிழ் பிக் பாஸ் குறித்த அறிவிப்பு நேற்று (02) வெளியானது. இந்த இரண்டு அறிவிப்புகளுக்கும் இடையே ஒரு சுவாரஸ்யமான ஒற்றுமை உள்ளது. பிரபலங்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் பிக் பாஸ் வீட்டில் போட்டியிடும் 'காமன் மேன்' குறித்த அறிவிப்புதான் அது. 

பிக் பாஸ் தமிழை ஒளிபரப்பும் ஸ்டார் விஜய் வெளியிட்டுள்ள புதிய ப்ரோமோவில், நிகழ்ச்சியின் தொகுப்பாளரான விஜய் சேதுபதி, பொதுமக்களை அடுத்த சீசனில் பங்கேற்க அழைக்கிறார். இதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அந்த ப்ரோமோவில் விளக்கப்பட்டுள்ளது. 

உங்களை அறிமுகப்படுத்தி, பிக் பாஸில் ஏன் பங்கேற்க விரும்புகிறீர்கள் என்பதை விளக்கி இரண்டு நிமிட வீடியோவை அனுப்ப வேண்டும். வரவிருப்பது தமிழ் பிக் பாஸின் 10 ஆவது சீசன் என்பது குறிப்பிடத்தக்கது. 

மறுபுறம், மலையாளத்தில் வரவிருக்கும் 8 ஆவது சீசனில், பொதுமக்களை வெறுமனே அழைப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், அவர்களுக்காகவே ஒரு பிரத்யேக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய உள்ளனர். அடுத்த சீசனில் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் பங்கேற்பார்கள் என தொகுப்பாளர் மோகன்லால் ஒரு ப்ரோமோவில் கூறியுள்ளார். 

இவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 'பிக் பாஸ் அக்னிபரீட்சை' என்ற பெயரில் ஒரு போட்டி நிகழ்ச்சியை ஏசியாநெட் நடத்தவுள்ளது. 

இந்த 'அக்னிபரீட்சை'யில் வெற்றி பெறுபவர்களுக்கு, பிக் பாஸ் மலையாளம் சீசன் 8 இல் நேரடியாக நுழையும் வாய்ப்பு கிடைக்கும். பிக் பாஸில் பங்கேற்க வேண்டும் என்ற கனவோடு இருப்பவர்களுக்கு இது ஒரு அருமையான வாய்ப்பு. ஆனால், இதற்கு எப்படி விண்ணப்பிப்பது போன்ற விவரங்களை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இன்னும் அறிவிக்கவில்லை. 

இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய முயற்சி, நிகழ்ச்சியை இன்னும் விறுவிறுப்பாக மாற்றும் என்பதில் சந்தேகமில்லை. 

இப்படி காமன்மேனை உள்ளே அனுப்புவது இது முதன்முறை அல்ல, இதற்கு முன்னதாக தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் காமன்மேன் சிலரை உள்ளே அனுப்பி இருந்தனர். அதில் ஆச்சர்யம் என்னவென்றால், காமன் மேனாக உள்ளே அனுப்பப்பட்ட மூவரில் ஒருவர் தான் டைட்டில் ஜெயித்து இருந்தார்.


MOST READ

காணொளி
காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

355 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

கோப்பாய் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

23 ஆம் நாள் அகழ்வில் மேலும் 12 என்புக்கூடுகள் அடையாளம்!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

பாராளுமன்றில் அர்ச்சுனா அதிரடி!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை கட்டியெழுப்பப்பட வேண்டும்!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

அரசாங்கம் ஓர் அரசியல் நாடகத்தை ஆடுகிறது!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

சிறந்த பொருளாதாரக் கொள்கையுடன் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம்!

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

விவசாயிகள் நஞ்சு குடித்து உயிரை மாய்ப்பதா?

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

ரியாஸ் பாருக் பாராளுமன்றில் அதிரடி!

title