Header Logo

சினிமா
61 வயதில் திருமணத்திற்கு தயாராகும் ஆமிர் கான்!

Jun 3, 2026 - 06:01 PM -

0

61 வயதில் திருமணத்திற்கு தயாராகும் ஆமிர் கான்!

61 வயதான பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கான், தனது தோழி கௌரி ஸ்ப்ராட்டை (47) வரும் ஜூலை 5 ஆம் திகதி மிக எளிமையான முறையில் திருமணம் செய்யவிருக்கிறார். மும்பையில் உள்ள அமீர் கானின் இல்லத்தில், இருவீட்டாரின் குடும்பத்தினர் மற்றும் மிக முக்கிய நண்பர்கள் முன்னிலையில் இந்த 'பதிவுத் திருமணம்' (Registered Marriage) நடைபெற உள்ளது. 

அமீர் கானுக்கு நெருக்கமான வட்டாரங்கள் அளித்துள்ள தகவலின்படி, இருவரும் சமீபத்தில்தான் தங்களது உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். 

"அவர்கள் இருவரும் தற்போது தங்களின் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான, பாதுகாப்பான சூழலில் இருக்கிறார்கள். தங்களின் பந்தத்தை முறைப்படி கொண்டாடவே இந்த முடிவு. இதற்கான திருமண ஏற்பாடுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன" என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

இந்தத் திருமணம் முற்றிலும் தனிப்பட்ட முறையில், நெருங்கிய வட்டாரங்களுக்குள் மட்டுமே நடக்கவிருக்கிறது. பெரிய அளவில் கொண்டாட்டங்கள் எதுவும் திட்டமிடப்படவில்லை. 

இருப்பினும், பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களான ஷாருக் கான் மற்றும் சல்மான் கான் ஆகியோர் தங்களது கால்ஷீட் நேரத்தைப் பொறுத்து, இந்தத் திருமணத்தில் கலந்து கொள்ளக்கூடும் என்று திரையுலகில் தெரிவிக்கப்படுகிறது. 

கௌரி ஸ்ப்ராட், முன்பு 'அமீர் கான் புரொடக்ஷன்ஸ்' நிறுவனத்தில் பணிபுரிந்தவர். இவருக்கு முதல் திருமணம் மூலம் 'குவின்' என்ற 7 வயது மகன் உள்ளார். 

இருதரப்பு குடும்பத்தினரின் முழு சம்மதத்துடனேயே இந்தத் திருமணம் நடைபெறுகிறது. அமீர் கானுக்கு ஏற்கனவே ரீனா தத்தாவுடன் முதல் திருமணமாகி ஜுனைத், இரா என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். 

பின்னர், இயக்குனர் கிரண் ராவை இரண்டாவது திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆசாத் என்ற மகன் உள்ளார். அமீரும் கிரணும் கடந்த 2021 இல் தங்களது பிரிவை அறிவித்தனர். 

கடந்த ஆண்டு மும்பையில் நடந்த தனது பிறந்தநாள் விழா ஒன்றில், அமீர் கான் முதன்முதலாக கௌரியை ஊடகங்களுக்கு அறிமுகப்படுத்தினார். தாங்கள் ஓராண்டுக்கும் மேலாக காதலித்து வருவதை ஒப்புக்கொண்ட அவர், அப்போது திருமணம் பற்றிக் கூறுகையில், 

"நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்கிறோம். ஆனால், 60 வயதில் திருமணம் எனக்கு செட் ஆகுமா என்று தெரியவில்லை, பார்க்கலாம்!" என்று நகைச்சுவையாகக் கூறியிருந்தார். ஆனால், இப்போது அவர் திருமணத்திற்கு சம்மதித்துள்ளார். 

சமீபத்தில் அமீர் கான் நடிப்பில் 'சிதாரே ஜமீன் பர்' (Sitaare Zameen Par) திரைப்படம் வெளியானது. இதனைத் தொடர்ந்து, பிரபல கிரிக்கெட் பயிற்சியாளரின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'லாலா அமர்நாத் பயோபிக்' மற்றும் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கவிருக்கும் புதிய படம் ஆகியவற்றில் அமீர் கான் நடிக்க உள்ளார்.


MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title