Header Logo
Mogo Academy

சினிமா
ஜனநாயகன் கசிவு - மேலும் ஒருவர் கைது

Jun 4, 2026 - 01:32 PM -

0

ஜனநாயகன் கசிவு - மேலும் ஒருவர் கைது
Mobitel inner

விஜய் முதல்வர் ஆகும் முன் கடைசியாக நடித்த படம் ஜனநாயகன். 

சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, துணிவு பட இயக்குநர் ஹெச். வினோத் இப்படத்தை இயக்க மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் இதில் நடிக்க அனிருத் இசையமைத்திருந்தார். 

கடந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆக வேண்டிய படம் சென்சார் முட்டுக்கட்டையால் முடங்கியது. 

இடையில் படம் இணையத்தில் லீக் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் நாளை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 

இச்சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். படம் எடிட்டிங் குழுவில் இருந்தவரால் கசியவிடப்பட்டது என்று கண்டறியப்பட்டது. 

இந்த வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். 9 பேரின் ஜாமீன் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் தள்ளுபடி செய்தது. 

இந்நிலையில் இந்த வழக்கில் ஐடி ஊழியரான மேலும் ஒருவர் சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதன்மூலம் இதுவரை இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara