Header Logo
Mogo Academy

சினிமா
ஒரே நாளில் 135 கோடி ரூபா வசூல் குவித்த 'பெத்தி'!

Jun 5, 2026 - 11:35 AM -

0

ஒரே நாளில் 135 கோடி ரூபா வசூல் குவித்த 'பெத்தி'!
Mobitel inner

ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் நடிப்பில் வெளியாகி உள்ள படம் ‘பெத்தி’. புஜ்ஜி பாபு சனா இயக்கத்தில் உருவான ‘பெத்தி’ படம் தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நேற்று (04)  வெளியானது. 

ஏ.ஆர்.ரகுமான் இசையத்துள்ள இப்படத்தில் சிவராஜ்குமார், ஜெகபதி பாபு, போமன் இரானி, திவ்யேந்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

மலை கிராமத்தில் வாழ்ந்து வரும் நாயகன் ராம் சரண், ஊரே அசந்து போகும் அளவிற்கு கிரிக்கெட் வீரராக இருக்கிறார். என்னதான் விளையாட்டு வீரராக இருந்தாலும், மேல் தட்டு மக்கள் இவரை மலை சாதி என்று ஒதுக்கி வைக்கிறார்கள். மேலும் இவருக்கும் ஊர் மக்களுக்கும் எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் இருக்கிறார்கள். இதனால் பல இடங்களில் இவர்கள் அவமானப் படுத்தபடுகிறார்கள். இந்த அவமானத்தை துடைக்கவும், தனக்கான அடையாளத்தையும் உருவாக்கவும் ராம் சரண் முயற்சி செய்கிறார். இறுதியில் தனக்கான அடையாளத்தை ராம் சரண் உருவாக்கினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை. 

‘பெத்தி’ படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது. படம் வெளியான முதல் நாளே உலக அளவில் 135.36 கோடி ரூபாவுக்கு மேல் வசூல் குவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் இனி வரும் நாட்களில் ‘பெத்தி’ படம் வசூலை வாரிக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara