Header Logo
Vallibel FD
Selan Bank
பல்சுவை
3 குழந்தைகளின் தாயை கடத்தி கூட்டு பலாத்காரம்!

Jun 5, 2026 - 04:28 PM

3 குழந்தைகளின் தாயை கடத்தி கூட்டு பலாத்காரம்!
Mobitel Inner 1278

நள்ளிரவில் வீடு புகுந்து 3 குழந்தைகளின் தாயை கடத்தி சகோதரனுடன் கள்ளக்காதலன் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் வீடியோ எடுத்தும் மிரட்டியுள்ளார். 

இந்தியாவின் ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 30 வயதுடைய பெண் ஒருவர் தனது 3 மகள்களுடன் வசித்து வந்துள்ளார். இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுள்ளார். 

இந்நிலையில் இப்பெண்ணுக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் (35) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. 

இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். கடந்த 03 ஆம் திகதி நள்ளிரவு குறித்த பெண் தனது மகள்களுடன் வீட்டில் உறங்கியுள்ளார். 

அப்போது சுதாகர் மதுபோதையில் வீட்டுக்கு வந்து குறித்த பெண்ணை உல்லாசமாக இருக்க வெளியே வருமாறு அழைத்துள்ளார். 

அவர் இரவு நேரத்தில் 3 மகள்களை விட்டுவிட்டு வரமுடியாது என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுதாகர் பெண்ணை வலுக்கட்டாயமாக கிராமத்தின் அருகே மறைவான இடத்திற்கு கடத்திச் சென்றுள்ளார். மறைவான இடத்திற்கு சென்றபோது அங்கு சுதாகரின் சகோதரனும் இருந்துள்ளார். 

அவர்கள் இருவரும் பெண்ணை அடித்து உதைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதை சகோதரர்கள் இருவரும் மாறிமாறி வீடியோ எடுத்து மிரட்டியுள்ளனர். அதன்பிறகு இவர்களிடம் இருந்து தப்பிய பெண் வீட்டுக்கு சென்றுவிட்டார். 

ஆனால் சிறிது நேரத்தில் சுதாகர், பெண் வீட்டுக்கு சென்று மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த பெண் நகரிக்கல்லு பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். 

அதன்பேரில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் சுதாகர், ஆந்திர தலைமைச் செயலகத்தில் வேலை செய்துள்ளார். 

அப்போது 3 பெண்களை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் ஏமாற்றி பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அப்பெண்கள் புகார் கொடுத்துள்ளனர். 

இதனால் சுதாகர் பணி நீக்கமும் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது. 

இதையடுத்து தற்போது கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்ட சுதாகர் மற்றும் அவரின் சகோதரனை பொலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை காப்பற்றுவதே எமது இலக்கு!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டம்!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

நீதித்துறை இன்று சுதந்திரமாக செயல்படுகிறது!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

அனோஜனைக் காப்பாற்றக் குரல்கொடுக்கும் யாழ்ப்பாணம்!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

லிந்துலையில் குளவி தாக்கி ஒருவர் பலி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

இன்னொரு உயிரை இழக்கத் தயாரில்லை!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

மகனை மன்னித்து விடுதலை செய்யுங்கள்!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

பாடசாலை நோக்கிய மாணவர்களின் படையெடுப்பு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

சாவகச்சேரியில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு!

Mobitel 1278