Header Logo
Mogo Academy

சினிமா
தோள் மீது கை வைத்த விஜய்!

Jun 5, 2026 - 05:37 PM -

0

தோள் மீது கை வைத்த விஜய்!
Mobitel inner

தளபதி விஜய்யை முதல் முறையாக சந்தித்தபோது தான் அவர் மீதே மயங்கி விழுந்ததாக தெரிவித்திருக்கிறார் குஷ்பு சுந்தரின் இளைய மகள் அனந்திதா. அதன் பிறகு காருக்குள் அமர்ந்து அழுதபோதும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. 

குஷ்பு, சுந்தர் சி.யின் இளைய மகள் அனந்திதா உதவி இயக்குநராக இருந்து வருகிறார். இந்நிலையில் டபுள் ஆக்குப்பன்சி படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார். ஜூன் 12 ஆம் திகதி ரிலீஸாகவிருக்கும் டபுள் ஆக்குபன்சி படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் அனந்திதா. 

இந்நிலையில் குமுதமுக்கு அளித்த பேட்டியில் விஜய் முதல்வராவதற்கு முன்பு அவரை சந்தித்தது குறித்து பேசியிருக்கிறார் சுந்தர் சி.யின் செல்லம். அனந்திதா கூறியதாவது, 

2021 ஆம் ஆண்டு தான் முதல் முறையாக விஜய் சாரை பார்த்தேன். என் தோள் மீது அவர் கை வைத்தார். உடனே நான் மயங்கிவிட்டேன். அதுவும் அவர் மீதே விழுந்தேன். உடனே அவர் என்னை தாங்கிப்பிடித்துவிட்டார். அதன் பிறகு காருக்குள் ஏறியதுமே அழ ஆரம்பித்துவிட்டேன். 

அவரை பார்த்த சந்தோஷத்தில் இரண்டு நிமிடம் அழுதேன். என்னடா கார் நகரவே இல்லை என்று பார்த்தால் வெளியே விஜய் சார் நின்று என்னை பார்த்துக் கொண்டிருந்தார். ஒரே அசிங்கமா போச்சு. 

பின்னர் வாரிசு படத்தில் அம்மா நடித்திருந்தார். அதனால் என்னை ஷூட்டிங்கிற்கு அழைத்துச் சென்றார். ஆறு மாதத்திற்கு முன்பு விஜய்யை பார்த்தபோது அழுது மானத்த வாங்கின. மறுபடியும் அழுதிடாதே என சொல்லி அழைத்துச் சென்றார் என்றார். 

இந்த முறைலாம் நான் அழவே மாட்டேன். பார்க்கத் தானே போறீங்கம்மா என்று கெத்தாக டயலாக் விட்டிருக்கிறார் அனந்திதா. 

ஆனால் ஷூட்டிங்கில் விஜய்யை பார்த்ததும் ஓனு அழ ஆரம்பித்துவிட்டார். ரொம்ப சந்தோஷமாக இருந்தாலோ, கோபம் வந்தாலோ அழுதுவிடுவாராம் குஷ்பு மகள். ரொம்ப எமோஷனல் டைப்பாம். 

விஜய்ணாவை பார்த்து மயங்கிவிட்டீர்களா அனந்திதா?. கேட்கவே பயங்கரமாக இருக்கே. உங்களுக்கு விஜய்யை அந்த அளவுக்கு பிடிக்குமா, சந்தோஷத்தில் மயங்கியிருக்கிறீர்கள், அழுதிருக்கிறீர்கள்?. குஷ்பு அக்கா வீட்டில் ஒரு தளபதி ரசிகை, சூப்பர் என விஜய் ரசிகர்கள் சந்தோஷப்படுகிறார்கள். 

ஒரு சிலரோ, உங்கக்கா அவந்திகாவுக்கு என்று திருமணம் என திகதியை சொல்ல முடியுமா அனந்திதா என கேட்டிருக்கிறார்கள். மூத்த மகளுக்கு கல்யாணம் வச்சிருக்கோம் தம்பி, கண்டிப்பா வரணும் என விஜய்யின் வீடு தேடிச் சென்று அழைத்திருக்கிறார் குஷ்பு. அக்கா கூப்பிட்டு வராமலா என நிச்சயம் அவந்திகா, ஷ்ரவன் சீனிவாசனின் திருமணத்திற்கு வருவார் விஜய் என நம்பப்படுகிறது.


MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara