Header Logo

பல்சுவை
உலகின் மிகவும் விலையுயர்ந்த 6 உணவுகள் இவை தான்!

Jun 6, 2026 - 12:15 PM -

0

உலகின் மிகவும் விலையுயர்ந்த 6 உணவுகள் இவை தான்!

சிலர் தங்களுக்கு பிடித்த உணவுகளை சாப்பிட பணம் செலவிட தயங்கமாட்டார்கள். அப்படிப்பட்டவர்களுக்காக உலகில் சில உணவுகள் இருக்கின்றன. அவற்றின் விலை ஒரு கிராமமே வாழ முடியும் அளவுக்கு இருக்கும். இப்படி உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த 6 உணவுப் பொருட்களைப் பற்றி இப்போது தெரிந்துகொள்ளலாம். 

மட்சுடேக் காளான் – இவை உலகில் மிகவும் அரிதாகக் கிடைக்கும் காளான்கள். ஜப்பானின் காடுகளில் இயற்கையாகவே வளர்கின்றன. சரியான காலநிலை, சரியான நேரம் வந்தால் தான் இவை வளரும். இல்லையென்றால் கிடைக்காது. இப்போது ஒரு கிலோ மட்சுடேக் காளானின் விலை சுமார் 3,00,000 ரூபா வரை இருக்கிறது. சுவையும், ஊட்டச்சத்தும் அதிகமாக இருப்பதால் ஆடம்பர உணவகங்களில் இதற்கான தேவை அதிகம் உள்ளது. இந்தக் காளானை சாப்பிட வேண்டும் என்றால் அதிக பொறுமையும், நிறைய பணமும் வேண்டும். 

வெள்ளை காவியர் – இது அரிதான பெலுகா ஸ்டர்ஜன் என்ற மீனின் முட்டைகளில் இருந்து தயாரிக்கப்படும் உணவாகும். லண்டன் போன்ற நகரங்களில் உள்ள சில சிறப்பு கடைகளில் மட்டுமே இது கிடைக்கும். ஒரு கிலோ வெள்ளை காவியரின் விலை சுமார் 30,00,000 ரூபா வரை இருக்கும். கிடைக்கும் அளவு மிகவும் குறைவு, ஆனால் வாங்க விரும்புபவர்கள் அதிகம். அதனால் விலை உயர்ந்துள்ளது. மென்மையான சுவையால், பெரிய விருந்துகளில் இது ஒரு அந்தஸ்துக் குறியீடாகக் கருதப்படுகிறது. உலகின் மிகவும் விலையுயர்ந்த உணவுகளில் ஒன்றாக கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. 

வெள்ளை ஆல்பா ட்ரஃபிள் – இது மண்ணுக்குள் வளரும் ஒரு வகை காளான். உலகில் மிகவும் விலை உயர்ந்த உணவுகளில் இதுவும் ஒன்று. ட்ரஃபிளை தேடி பிடிப்பது மிகவும் கடினம். அதற்காக சிறப்பு பயிற்சி பெற்ற நாய்களின் உதவியுடன் இவை கண்டுபிடிக்கப்படுகிறது. ஒரு பெரிய ட்ரஃபிளின் விலை சுமார் 1,00,00,000 ரூபா வரை ஏறி இருக்கிறது. ஹாங்காங்கில் ஒருவர் தனது மனைவிக்காக இதை அதிக அளவில் வாங்கிய சம்பவமும் நடைபெற்றுள்ளது. இதன் வாசனையும் சுவையும் மிகவும் வித்தியாசமாக இருக்கும். பாஸ்தா, பீட்சா, ரிசொட்டோ போன்ற உணவுகளின் மேல் துருவி போட்டால் அந்த உணவுகளுக்கு ருசி அதிகரிக்கும். காலநிலை மாற்றம் காரணமாக இதன் உற்பத்தி குறைந்ததால் விலையும் அதிகமாகி வருகிறது. 

கோபி லுவாக் காபி – இது உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த காபியாகக் கருதப்படுகிறது. புனுகுப் பூனை என்ற விலங்கு காபி கொட்டைகளைத் தின்னும். அக்கொட்டைகள் முழுவதும் செரியாமல் அதன் மலத்துடன் வெளியே வரும். அவற்றை சேகரித்து சுத்தம் செய்து, பதப்படுத்தி இந்த காபி தயாரிக்கப்படுகிறது. ஒரு கிலோ இந்தக் கொட்டைகளின் விலை லட்சங்களைத் தாண்டும். ஒரு கப் கோபி லுவாக் காபியின் விலை சுமார் 3,000 ரூபா முதல் 10,000 ரூபா வரை இருக்கும். சாக்லேட், கேரமல் போன்ற நறுமணத்துடன் இருக்கும் இந்தக் காபியைச் சுவைக்க பல செல்வந்த சுற்றுலாப் பயணிகள் இந்தோனேசியாவுக்கு செல்வார்கள். உற்பத்தி குறைவாக இருப்பதால் விலை மேலும் அதிகரிக்கிறது. 

டென்சுகே கருப்பு தர்பூசணி – ஜப்பானில் மட்டுமே, அதிலும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே விளையும் கருப்பு நிறத் தர்பூசணி இது. ஆண்டுக்கு சில டஜன் மட்டுமே கிடைக்கும். ஒவ்வொரு தர்பூசணியும் 5 முதல் 7 கிலோ வரை எடையிருக்கும். ஒரு தர்பூசணியின் விலை சுமார் 4,00,000 ரூபா முதல் 5,00,000 ரூபா வரை இருக்கும். இந்தியாவில் தர்பூசணி ரூ. 100க்கு கிடைக்கும்போது, இந்தத் தர்பூசணி அந்தஸ்துக்காகவே வாங்கப்படுகிறது. மிகவும் இனிப்பு, சாறு நிறைந்ததாக இருக்கும். ஜப்பானில் ஏலத்தில் இது மிக அதிக விலைக்கு விற்கப்படுகிறது. பரிசாகவும், சிறப்பு நிகழ்ச்சிகளிலும் இதை பயன்படுத்துவது வழக்கம். 

மூஸ் சீஸ் – இது ‘மூஸ்’ எனப்படும் மான் இன விலங்கின் பாலில் இருந்து தயாரிக்கப்படும் அரிய வகை சீஸ். மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை மட்டுமே இந்த சீஸ் தயாரிக்கப்படுகிறது. ஆண்டுக்கு சுமார் 300 கிலோ மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு கிலோ மூஸ் சீஸின் விலை சுமார் 90,000 ரூபா வரை இருக்கும். இதன் தன்மையும் சுவையும் வித்தியாசமாக இருப்பதால், ஆடம்பர சீஸ் விரும்புபவர்களுக்கு இது மிகவும் பிடிக்கும். உற்பத்தி குறைவு, பராமரிப்பு அதிகம் என்பதால் இது உலகின் மிகவும் விலையுயர்ந்த சீஸ்களில் ஒன்றாக உள்ளது. பணக்காரர்கள் தங்கள் விருந்துகளில் இந்த சீஸை பரிமாறி விருந்தினர்களை வரவேற்கிறார்கள். இப்படிப்பட்ட உணவுகள் அவர்களின் வாழ்க்கையை இன்னும் ஆடம்பரமாக காட்டுகின்றன.


MOST READ

காணொளி
வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்!

வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு குழு அட்டகாசம்!

வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டம்!

வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டம்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

title