Header Logo
Mogo Academy

சினிமா
ரவி மோகன் படத்தில் நிராகரிக்கப்பட்ட பாடல் வரிகள் - விஜய் படத்தில் ஹிட்!

Jun 6, 2026 - 02:54 PM -

0

ரவி மோகன் படத்தில் நிராகரிக்கப்பட்ட பாடல் வரிகள் - விஜய் படத்தில் ஹிட்!
Mobitel inner

தமிழ் சினிமாவில் ஒரு பாடல் வெற்றி பெறுவதற்கு இசை மட்டுமல்ல, அதற்கான வரிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. பல தசாப்தங்களாக ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கும் ஏராளமான பாடல்களுக்கு பின்னால் திறமையான பாடலாசிரியர்களின் பங்களிப்பு உள்ளது. அந்த வகையில், பாடலாசிரியர் யுகபாரதி எழுதிய ஒரு பாடல் வரி முதலில் ஒரு படத்தில் நிராகரிக்கப்பட்டு, பின்னர் மற்றொரு படத்தில் இடம்பெற்று சூப்பர் ஹிட்டான சம்பவம் தற்போது ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம். 

இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில், ரவி மோகன் நடித்த ‘எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ திரைப்படம் உருவாகிக் கொண்டிருந்தபோது, ஒரு காதல் பாடலுக்கான வரிகளை எழுதுமாறு இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, யுகபாரதியிடம் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்காக யுகபாரதி முதலில் “கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் கண்டேன்” என்ற வரிகளை எழுதியிருந்தார். ஆனால் அந்த காலகட்டத்தில் இளைஞர்களை அதிகம் கவரக்கூடிய, இன்னும் நவீனமான வார்த்தைகள் கொண்ட பாடல் வேண்டும் என்ற எண்ணத்தில், படக்குழு வேறு விதமான வரிகளை கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதன்படி, யுகபாரதி “அய்யோ அய்யோ உன் கண்கள் அய்யய்யோ” என்ற புதிய வரிகளை எழுதி கொடுத்தார். இந்தப் பாடலே பின்னர் படத்தில் இடம்பெற்று ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதற்கிடையில், பயன்படுத்தப்படாமல் இருந்த “கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் கண்டேன்” என்ற வரிகளை யுகபாரதி தனியாக வைத்திருந்தார். அப்போது விஜய் நடிப்பில் உருவாகி வந்த ‘மதுர’ திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் வித்யாசாகர் பாடல் வரிகளை தேடியபோது, அந்த வரிகளை யுகபாரதி அவரிடம் வழங்கியதாக கூறப்படுகிறது. 

பின்னர் அந்தப் பாடல் ‘மதுர’ படத்தில் இடம்பெற்று ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்பாடலை மது பாலகிருஷ்ணன் மற்றும் சாதனா சர்கம் ஆகியோர் பாடி இருந்தனர். ஒரு படத்தில் நிராகரிக்கப்பட்ட வரிகள், மற்றொரு படத்தில் இடம்பிடித்து சூப்பர் ஹிட் பாடலாக மாறியது தமிழ் சினிமாவின் சுவாரஸ்யமான பின்னணிக் கதைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஒரு பாடலின் வெற்றி அதன் தரத்தை மட்டுமல்ல, அது சரியான இடத்திலும் சரியான சூழலிலும் பயன்படுத்தப்படுவதையும் பொறுத்தது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.


MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara