Header Logo
Mogo Academy

சினிமா
அவதூறு வழக்கில் சிக்கிய கெனிஷாவிற்கு அபராதம்!

Jun 6, 2026 - 05:20 PM -

0

அவதூறு வழக்கில் சிக்கிய கெனிஷாவிற்கு அபராதம்!
Mobitel inner

நடிகர் ரவி மோகன் உடன் தொடர்புபடுத்தி தொடர்ந்து பேசப்பட்டு வரும் பாடகி கெனிஷா பிரான்சிஸ் தற்போது மற்றொரு சட்டப் பிரச்சனையில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சமூக வலைதளத்தில் அவதூறு கருத்துகளை வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் ஷார்ஜா நீதிமன்றம் கெனிஷாவிற்கு அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவி இடையிலான குடும்ப பிரச்சனை விவகாரத்தில் கெனிஷாவின் பெயர் தொடர்ந்து பேசப்பட்டு வந்தது. 2024 ஆம் ஆண்டு ரவி மோகன் தனது மனைவியிடம் ஆர்த்தியுடனான திருமண உறவை முறித்துக்கொள்வதாக குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், ரவி மோகன் மற்றும் கெனிஷா இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் தோன்றியதும், சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படங்களும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தின. 

இந்த சூழலில், தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் பரவி வரும் விமர்சனங்களால் மனவேதனை அடைந்த பாடகி கெனிஷா உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். தனது வாழ்க்கை முழுவதும் பல சவால்களை எதிர்கொண்டதாகவும், சிறு வயதில் இருந்து அனாதையாக வளர்ந்த நான் யாருடைய குடும்ப வாழ்க்கையையும் கெடுக்க விரும்பவில்லை. 

இணையவழித் தாக்குதல்கள் மற்றும் மன உளைச்சல் காரணமாக இசைப் பயணத்தில் இருந்தும் தெரபி பணியில் இருந்தும் தற்காலிகமாக விலகுவதாகவும், சென்னையை விட்டு வெளியேறுவதாகவும் அவர் அறிவித்துள்ளார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ரவி மோகன், என்னை புரிந்து கொண்ட ஒரே பெண் கெனிஷா அவரையும் அனுப்பிவிட்டீங்க என கண்ணீருடன் பேசிய ரவி மோகன் தான் திருமண வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகள் குறித்தும் பேசி இருந்தார். 

இந்நிலையில் பாடகி கெனிஷா தற்போது புது பிரச்சனையில் சிக்கி உள்ளது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளார். அதாவது. இந்திய பெண் ஆன்லெட் மெர்லினுக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் அவதூறு கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஷார்ஜா நீதிமன்றம் பாடகி கெனிஷாவுக்கு அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. 

இந்திய மதிப்பில் சுமார் 1.30 லட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளதாக கூறப்படுகிறது. இணையத்தில் இந்த செய்தி டிரெண்டாகி வரும் நிலையில் இதைப்பார்த்த இணையவாசிகள் "கெனிஷாவுக்கு நேரம் சரியில்லை, அவர் செல்லும் இடமெல்லாம் ஏதாவது ஒரு சர்ச்சை உருவாகிறது என நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.


MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara