Header Logo
SLIC
பல்சுவை
13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 700 ஆண்கள்!

Jun 8, 2026 - 04:29 PM

13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 700 ஆண்கள்!
Mobitel Inner 1278
EDEX Inner

பிரிட்டனில் பல ஆண்டுகளாக அரங்கேறி வரும் பாலியல் சீண்டல் கும்பல் குறித்த அதிர்ச்சியூட்டும் உண்மைகளை அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் ரூபர்ட் லோவ் வெளியிட்டுள்ளார். அவரது தனிப்பட்ட விசாரணையின் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்குமூலங்கள், பிரிட்டன் பாராளுமன்றத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. 

இந்த கும்பல்கள் பிரிட்டனின் 85 இற்கும் மேற்பட்ட பகுதிகளில் சிறுமிகளை குறிவைத்து கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் கொடூரமான சித்திரவதைகளில் ஈடுபட்டு வந்துள்ளன. பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், தான் 13 வயது முதல் மூன்று ஆண்டுகளில் சுமார் 600 முதல் 700 ஆண்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக கண்ணீருடன் தெரிவித்துள்ளார். மற்றொரு பெண், நாய் கூண்டுகளில் அடைக்கப்பட்ட 15 - 20 சிறுமிகளை கண்டதாக குறிப்பிட்டுள்ளார். 

அரசு விசாரணைகளின்படி, இத்தகைய திட்டமிடப்பட்ட குற்றங்களில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தானிய வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இனம் மற்றும் மத ரீதியான பாகுபாடுகளுடன், குறிப்பாக வெள்ளையின மற்றும் கிறிஸ்தவ சிறுமிகளே இந்த கொடூரங்களுக்கு பெருமளவில் ஆளாக்கப்பட்டுள்ளனர். 

கடந்த 1997 முதல் 2013 வரை ரோதர்ஹாம் பகுதியில் மட்டும் 1,400 இற்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இனம் சார்ந்த விமர்சனங்களுக்கு பயந்து, பொலிஸாரும் உள்ளூர் நிர்வாகமும் நீண்ட காலமாக இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தவறியதாக கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278