Header Logo
SLIC
பல்சுவை
தேனிலவுக்கு பெற்றோரை அழைத்து வந்த கணவன்!

Jun 9, 2026 - 11:14 AM

தேனிலவுக்கு பெற்றோரை அழைத்து வந்த கணவன்!
Mobitel Inner 1278
EDEX Inner

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், மீரட்டைச் சேர்ந்த திவ்யாவுக்கும், டெல்லியில் வசிக்கும் சிவம் குமாருக்கும் ஆன்லைன் மெட்ரிமோனி மூலாமாக அண்மையில் பெற்றோர்களால் திருமணம் செய்து வைக்கப்பட்டது. 

விருந்தோம்பல் மேலாண்மை படித்த சிவம், திருமணத்திற்குப் பிறகு தன் மனைவியுடன் துபாய்க்குத் தேனிலவு செல்லத் திட்டமிட்டிருந்தார். 

ஆனால், அவர் தன் மனைவியுடன், தன் பெற்றோர், சகோதரி மற்றும் சகோதரரையும் அதே பயணத்திற்கு அழைத்துச் சென்றிருந்தார். 

தன் கணவருடன் தனிமையில் நேரம் செலவிட நினைந்த திவ்யாவுக்கு இது பிடிக்கவில்லை. தேனிலவு என்பது தம்பதியினரின் தனிப்பட்ட விஷயம் என்றும், குடும்ப உறுப்பினர்களுடன் செல்வது பயணத்தின் நோக்கத்தையே கெடுத்துவிடும் என்றும் அவர் கூறினார். 

ஆனால் தன் குடும்பத்தினரை மகிழ்விப்பதற்காகவே அவர்களை அழைத்துச் வந்ததாகவும், அதில் எந்தத் தவறும் இல்லை என்றும் கணவர் வாதிட்டார். 

இதனால் இருவருக்கும் இடையில் பிணக்கு ஏற்பட்டு விவாகரத்து முடிவு வரை சென்றது. 

இருவருக்கும் மீரட் பொலிஸ் லைன்ஸ் குடும்ப ஆலோசனை மையத்தில் மூன்று சுற்றுப் ஆலோசனை அமர்வு நடந்தது. ஆனால் இருவரும் சமாதானம் ஆவதாக இல்லை. நான்காம் சுற்று விரைவில் நடைபெற உள்ளது. 

இந்த சம்பவம் இணையத்தில் விவாதப்பொருளாக மாறி, இளைஞர்கள் மத்தியில் தனியுரிமை மற்றும் குடும்ப நலன் குறித்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278