Header Logo
SLIC
பல்சுவை
வெயிலால் முடி கொட்டுதா?

Jun 9, 2026 - 02:24 PM

வெயிலால் முடி கொட்டுதா?
Mobitel Inner 1278
EDEX Inner

கோடையில் உஷ்ணம் மற்றும் வியர்வையால் ஸ்கால்ப் வறட்சியடைந்து, முடி வேரோடு கொட்டத் தொடங்கும். இந்த வெயில் கால முடி உதிர்வைத் தடுத்து, கூந்தலைக் குளிர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றும் 5 அசத்தலான எளிய டிப்ஸ் இதோ, 

வெயில்ல வெளிய போயிட்டு வந்து தலைக்கு குளிக்கும் போது, கடைசியாக ஒரு கப் 'ஐஸ் வாட்டர்' (ரொம்ப சில்லுனு இல்லாம, மிதமான குளுமை) கொண்டு தலையை அலசுங்கள். இது ஸ்கால்ப்பில் உள்ள துவாரங்களை (Pores) சுருக்கி, வியர்வையால் முடி வேர்கள் பலவீனமடைவதைத் தடுக்கும். 

நைட்டே சிறிது வெந்தயத்தை தண்ணீரில் ஊறப்போடுங்க. காலையில் அந்த தண்ணீரை மட்டும் வடிகட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வச்சுக்கோங்க. வெயில்ல வெளிய போறதுக்கு முன்பு ஸ்கால்ப்பில் லைட்டா ஸ்ப்ரே பண்ணிக்கிட்டா, தலை சூடாகவே ஆகாது; முடியும் கொட்டாது. 

வெயிலுக்கு பயந்து தலையில் துப்பட்டாவை டைட்டா கட்டிக்கிட்டு வண்டி ஓட்டுறீங்களா? அதுவே வியர்வையை தேக்கி வச்சு முடியை கொட்ட வைக்கும். துப்பட்டா கட்டுறதுக்கு முன்னாடி, தலைமுடியின் மேல் ஒரு மெல்லிய 'காட்டன் கர்ச்சீப்' அல்லது காட்டன் துணியை வச்சு, அதுக்கு மேல் துப்பட்டா கட்டுங்க. காட்டன் துணி வேர்வையை உறிஞ்சி வேர்களைக் காக்கும். 

தர்பூசணி சாப்பிட்டதும் அதோட வெள்ளைப்பகுதியை (தோலின் உள்பகுதி) மிக்ஸியில் அரைத்து சாறு எடுங்க. அதை வாரத்தில் இரண்டு நாள் தலையில் தடவி 10 நிமிடம் கழிச்சு அலசுங்க. வெயிலால் வறண்டு போன உங்கள் கூந்தலுக்கு இது இன்ஸ்டன்ட் ஹைட்ரேஷன் கொடுக்கும். 

வெயில் காலத்தில் தலைமுடி சீக்கிரம் சிக்கு விழும். அதுவும் நைலான் அல்லது மெட்டல் கிளிப் இருக்கிற ரப்பர் பேண்டுகளை போட்டால், வியர்வையோடு சேர்ந்து முடி அப்படியே கொத்தாக பிஞ்சு வரும். லூசான 'சாட்டின்' (Satin Scrunchies) அல்லது துணியால் ஆன ரப்பர் பேண்டுகளை மட்டும் பயன்படுத்துங்க.


MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278