Header Logo
SLIC
பல்சுவை
தினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடப்பது கட்டாயமா?

Jun 10, 2026 - 10:38 AM

தினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடப்பது கட்டாயமா?
Mobitel Inner 1278
EDEX Inner

ஒருவர் ஆரோக்கியமாக வாழ ஒரு நாளில் எத்தனை அடிகள் நடக்க வேண்டும் என்பது இரு விஷயங்கள் அடிப்படையில்தான் அமையும். 

புதிதாக நடைப்பயிற்சி செல்லும் பலரும், தினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடந்துவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் உள்ளனர். ஆனால் உண்மையிலேயே 10,000 அடிகள் என்ற கணக்கு அவசியம்தானா என்றால், இல்லை என்கின்றன சமீபத்திய சில ஆய்வுகள். எனில் எத்தனை அடிகள் நடப்பது அவசியம், எது உடலுக்கு அதிக நன்மைகளை கொடுக்கும், எதை வைத்து நாம் நடக்க வேண்டிய அடிகளை நிர்ணயிக்க வேண்டும் என்பது பற்றி இந்தத் தொகுப்பில் விரிவாக பார்க்கலாம். 

வயதான பெண்கள் மத்தியில் சமீபத்தில் செய்யப்பட்ட ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆய்வில், வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே 4,000 படிகள் நடந்தாலே அது இளம் வயதில் ஏற்படும் மரண ஆபத்தையும், இதய நோய்களையும் 25% மேல் குறைக்கிறது என்று கண்டறியப்பட்டது. எனவே தினமும் உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள், வாரத்தில் இரண்டு நாட்கள் நடந்தாலும் நல்ல பலன் கிடைக்கும். 

அதேபோல அமெரிக்காவில் உள்ள பெரியவர்களிடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், வாரத்தில் 1 அல்லது 2 நாட்கள் மட்டுமே 8,000 படிகள் நடப்பவர்களுக்கும், வாரம் முழுவதும் தினமும் 8,000 படிகள் நடப்பவர்களுக்கும் ஆரோக்கிய நன்மைகளில் பெரிய வித்தியாசம் இல்லை என்று கூறுகிறது. 

ஆகவே 10,000 அடிகள் நடப்பது என்பது ஒரு மாயைதான். உண்மையில் '10,000 அடிகள்' என்ற கணக்கு 1965-ஆம் ஆண்டு ஜப்பானில் ஒரு பெடோமீட்டர் (Pedometer) கருவியை விற்பனை செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு விளம்பர உத்தியே தவிர, அறிவியல் பூர்வமாக கணக்கிடப்பட்ட ஒன்று அல்ல என்கின்றனர் நிபுணர்கள். சரி, எனில் ஒருவர் எத்தனை அடிகள் ஒருநாளில் நடக்க வேண்டும், எது நல்ல பலன்களை கொடுக்கும் என்றுதானே யோசிக்கின்றீர்கள். அதையும் பார்த்துவிடலாம். 

ஒருவர் ஆரோக்கியமாக வாழ ஒரு நாளில் எத்தனை அடிகள் நடக்க வேண்டும் என்பது அவருடைய வயது மற்றும் ஆரோக்கிய இலக்கை பொறுத்தது. பொதுவான ஆரோக்கியத்திற்கும், நீண்ட ஆயுளுக்கும் தினமும் 7,000 முதல் 8,500 அடிகள் நடப்பதே மிகச்சிறந்த பலன்களைக் கொடுக்கும் என்று தற்போதைய அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. 

வயது அடிப்படையில் எத்தனை அடிகள் நடக்க வேண்டும் என்று பார்க்கையில், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் தினமும் 6,000 முதல் 8,000 அடிகள் வரை நடக்கலாம். அதிலும் 80 வயதுக்கு மேற்பட்டோர் 4,000 அடிகள் நடந்தால் போதும். அதுவே 18 முதல் 59 வயது வரை உள்ளவர்கள், தினமும் 7,000 முதல் 10,000 அடிகள் நடப்பது, உடல் எடையைக் கட்டுப்படுத்தவும், சுறுசுறுப்பாக இருக்கவும் உதவும். அதுவே 5 முதல் 17 வயதுக்குட்பட்டோர் தினமும் 10,000 முதல் 12,000 அடிகள் வரை நடக்கலாம். இந்த வயதில் எலும்புகள் மற்றும் தசைகள் வலுவடைய அதிக சுறுசுறுப்பு தேவை என்பதால் முடிந்தவரை நடக்கலாம். 

புதிதாக நடக்கின்றீர்கள் என்றால், எடுத்தவுடன் 40 நிமிடங்கள் / நீண்ட தூரமோ நேரமோ நடக்க வேண்டாம். முதலில் 10 நிமிடங்கள் வரை மட்டும் நடங்கள். ஓரிரு வாரம் கழித்து நேரத்தை கொஞ்சம் கொஞ்சமாக நீட்டித்துக் கொள்ளுங்கள்.


MOST READ

காணொளி
மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

Mobitel 1278