Header Logo
Mogo Academy

செய்திகள்
உணவு தயாரித்தல், நுகர்வில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து எச்சரிக்கை

Jun 11, 2026 - 02:41 PM -

0

உணவு தயாரித்தல், நுகர்வில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து எச்சரிக்கை
Mobitel inner

உணவு தயாரிப்பின் போதும், உட்கொள்ளும் போதும் தர நிர்ணயம் இல்லாத பிளாஸ்டிக் உபகரணங்களைப் பயன்படுத்துவதால் மாரடைப்பு, புற்றுநோய் மற்றும் ஹோர்மோன் சமநிலையின்மை உள்ளிட்ட பல சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. 

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அதன் சுற்றுச்சூழல், தொழில்சார் மற்றும் உணவுப் பாதுகாப்புப் பணிப்பாளர் வைத்தியர் சாந்தனி விதான, நீண்டகாலமாக பிளாஸ்டிக் உபகரணங்களைப் பயன்படுத்துவதன் மூலம் இவ்வாறான நோய்த்தாக்கங்கள் ஏற்படுவதாகக் குறிப்பிட்டார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்: 

"காலை வேளையில் தேநீர் தயாரிக்கும் போது, கொதிக்கும் சுடுநீரை தேயிலையுடன் சேர்த்து பிளாஸ்டிக் பாத்திரங்களில் போடுகிறோம் அல்லவா. பிளாஸ்டிக் போத்தல்கள், சாப்பாட்டுப் பெட்டிகள் போன்றவற்றில் முறையான தர நிர்ணயம் இருப்பதில்லை. அதேபோல், வெளியில் செல்லும் போது வீட்டிலிருந்து தண்ணீர் போத்தலைக் கொண்டு செல்லாமல் கடையிலிருந்து தண்ணீர் போத்தல்களை வாங்குகிறோம். இவை அனைத்திலும் நமக்குக் கண்ணுக்குத் தெரியாத நுண் துகள்கள் செயல்படுகின்றன. 

இவற்றைத்தான் நாம் 'மைக்ரோ பிளாஸ்டிக்' (Microplastics) என்று கூறுகிறோம். அத்துடன், பிபிஏ (BPA) போன்ற வேறு சில நச்சு இரசாயனங்களும் பிளாஸ்டிக்கில் அடங்கியுள்ளன. சில நேரங்களில் குழம்பு வகைகளை பொலித்தீன் உறைகளில் கொண்டு வருகிறோம். சாப்பாட்டுப் பொதிகளில் பொலித்தீனில் கட்டப்பட்ட உணவே இருக்கிறது. இவை அனைத்தின் மூலமும் பெருமளவிலான நச்சுக்கள் உடலுக்குள் நுழைகின்றன. 

இந்த நச்சுக்கள் நீண்டகாலமாக உடலில் சேரும் போது, அவை நமது இரத்த நாளங்கள் ஊடாகப் பயணித்து மூளை, சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகளில் படிந்துவிடுகின்றன. இவ்வாறு நீண்டகாலம் படிந்திருக்கும் போது அந்த உறுப்புகள் செயலிழக்கக்கூடும். மேலும், இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு போன்ற நோய்களும் உண்டாகலாம். 

பிபிஏ போன்ற இரசாயனப் பொருட்களால் ஹோர்மோன் குறைபாட்டு நோய்கள் மற்றும் மலட்டுத்தன்மை போன்ற அசாதாரண நிலைகள் ஏற்படலாம். பலவிதமான தொற்றா நோய்கள் மற்றும் நீண்டகால அழற்சித் தன்மைகள் கூட உருவாகலாம். இறுதியாக, இவை பல்வேறு வகையான புற்றுநோய்களாக வளர்ச்சியடையக்கூடும். 

எனவே, நாம் உணவைத் தயாரிக்கும் போது சுகாதாரப் பாதுகாப்பான உபகரணங்களைப் பயன்படுத்தினால் மட்டுமே உணவுப் பாதுகாப்பு என்பது அர்த்தமுள்ளதாக இருக்கும். சமையலின் போது மண்பாண்டங்கள், உலோகம், கண்ணாடி மற்றும் செராமிக் பாத்திரங்களை நாம் பயன்படுத்த முடியும்..." என்றார்.


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara