Header Logo
Mogo Academy

சினிமா
மக்களை தெருநாயாக சித்தரித்திருக்கிறீர்கள்!

Jun 15, 2026 - 12:42 PM -

0

மக்களை தெருநாயாக சித்தரித்திருக்கிறீர்கள்!
Mobitel inner

மக்களை நாயுடன் ஒப்பிட்டு பேசிவிட்டார் ராகவா லாரன்ஸ் என்கிற புகார் எழுந்திருக்கிறது. இந்நிலையில் அது குறித்து நடிகரும், இயக்குநருமான சேரன் எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார். 

லாரன்ஸ் அரசியலுக்கு வரலாமா, வேண்டாமா என்று தன் ரசிகர்களிடம் கேட்டார் ராகவா லாரன்ஸ். அவர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அல்லது அண்ணாமலையின் We The Leaders கட்சியில் சேர்வார் என்று பேசப்படுகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ராகவா லாரன்ஸ் கூறியதாவது, நான் ஒரு நல்ல முடிவு எடுத்திருக்கிறேன். அதை என் அம்மாவை வைத்து அறிவிப்பேன். இந்த ஒரு மாதமாக தவெக அரசின் செயல்பாடுகளை கவனித்து வருகிறேன். அது சூப்பராக இருக்கிறது. 

இப்போ புது ஏரியாவில் வாடகை வீட்டிற்கு சென்றால், வெளியே இருந்து பார்த்தால் வீடு நல்லா இருக்கும். உள்ளே போனால் தான் அனைத்தும் தெரியும். ரோட்டில் இருக்கும் தெருநாய் கூட நம்மை பார்த்து கத்தும். இந்த ஏரியாவில் யார் இது புது ஆளுனு கத்தும். 

அந்த தெருநாய்க்கு பிடித்த பிஸ்கட் கொடுக்கணும். சில நாய்களுக்கு பிரியாணி தான் பிடிக்கும். அதுக்கு பிடித்ததை கொடுத்து கத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு வீட்டுக்கே இவ்வளவு ஆகிறது என்றால் நாட்டை கொடுத்திருக்கிறீர்கள் கொஞ்சம் டைம் கொடுங்க. மாற்றம் வேண்டும் என்று கேட்டீங்க, மாற்றம் வந்துவிட்டது. டைம் கொடுக்க வேண்டாமா என்றார். 

இந்நிலையில் ராகவா லாரன்ஸ் பேசிய வீடியோவை பார்த்த இயக்குநர் சேரன் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,என்ன ஒரு அறிவுப்பூர்வமான விளக்கம் அளித்திருக்கிறீர்கள் லாரன்ஸ். மக்களை தெருநாயாக சித்தரிப்பதையும், பிஸ்கட், பிரியாணி கொடுத்து மக்களை குரைக்கவிடாமல் பார்த்துக்கணும் என்று சொல்லி வாக்காளனின் உணர்வை கேவலப்படுத்தும் உங்கள் பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன். 

மக்கள் எழுப்பும் எதிர்ப்பு குரலுக்கு ஏதாவது கொடுத்து வாயடைக்க வேண்டும் என்று சொல்வதில் இருந்தே உங்களின் அரசியல் பயணம் எதை நோக்கி செல்கிறது என்பது புரிந்துவிட்டது. இதுவரை உங்களிடம் இருந்ததாக நினைக்கப்பட்ட மனிதாபிமானத்தின் மீது சந்தேகம் ஏற்படச் செய்திருக்கிறது உங்களின் பேச்சு. இருப்பினும் உங்களுக்கும் இந்த மகக்ள் வாக்களிப்பார்கள். கவலைப்பட வேண்டாம். இப்படிக்கு... பிஸ்கட் பிரியாணிக்காக கையேந்தாத மக்களில் ஒருவன் என தெரிவித்துள்ளார். 

சேரனின் ட்வீட்டை பார்த்தவர்கள் இருவிதமாக கருத்து தெரிவித்துள்ளனர். ஒரு சிலரோ, ராகவா லாரன்ஸ் சொன்னதை முழுதாக புரிந்து கொள்ளாமல் பேசாதீங்க சேரன். மக்களுக்காக எவ்வளவோ நல்லது செய்த விஜய்காந்தையே காலி செய்துவிட்டது அரசியல். இந்நிலையில் லாரன்ஸை மட்டும் விட்டு வைக்குமா என்ன என்கிறார்கள். 

மேலும் சிலரோ, ராகவா லாரன்ஸ் ஏதோ சேவை செய்கிறார் என்று நினைத்தோம். கடைசியில் அவருக்கும் பதவி ஆசை வந்து அரசியலுக்கு வருகிறார். லாரன்ஸ் மாஸ்டரின் பேச்சு அதிருப்தி அளிக்கிறது. முதல்வர் விஜய்யின் ஒரு மாத கால காட்சி சூப்பர்னு சொல்லியிருக்கிறீர்களே. அதில் என்ன சூப்பர் என்னு சொல்ல முடியுமா மாஸ்டர் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். 

இதற்கிடையே தான் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்படத்தாக விளக்கம் அளித்திருக்கிறார் ராகவா லாரன்ஸ். ரசிகர்களும், மக்களும் என் தாய்க்கு சமமானவர்கள் என்று எப்பொழுதும் சொல்லும் ஆள் நான். நான் போய் மக்களை நாயுடன் ஒப்பிட்டதாக சிலர் தவறான தகவலை பரப்புகிறார்கள். மக்களை நாயென்று சொல்லும் அளவுக்கு இதயம் இல்லாதவன் நான் இல்லை. நான் என்ன சொன்னேன் என்பதை தெரிந்து கொள்ள முழு வீடியோவையும் பார்க்கவும் என்றார்.


MOST READ

காணொளி
செம்மணியில் போராட்டக்காரர்களை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

செம்மணியில் போராட்டக்காரர்களை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

செம்மணியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

செம்மணியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

Mobitel Upahara