Header Logo

செய்திகள்
யால தேசிய சரணாலயத்தில் 5 சுற்றுலாப் பயணிகள் கைது

Jun 15, 2026 - 01:05 PM -

0

யால தேசிய சரணாலயத்தில் 5 சுற்றுலாப் பயணிகள் கைது

யால தேசிய சரணாலயத்திற்குள் வனவிலங்கு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் ஐந்து சுற்றுலாப் பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்தச் சம்பவம் யால தேசிய சரணாலயத்தி 'சுது வெலிமுல்ல' பகுதியில் பதிவாகியுள்ளது. 

சஃபாரி பயணம் சென்ற இரண்டு ஜீப் வண்டிகளில் இருந்த குழுவினர், சரணாலயத்தின் விதிகளை மீறி ஜீப் வண்டிகளில் இருந்து கீழே இறங்கி நடந்து சென்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அப்போது அவர்கள் வனவிலங்கு அதிகாரிகளையும் அச்சுறுத்தியுள்ளனர். 

அதன் பின்னர், சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்து திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, யால ஜீப் சங்கங்களின் கூட்டமைப்பு குறிப்பிடுகையில், யால சரணாலயத்திற்குள் ஜீப் சாரதியோ அல்லது வேறு நபரோ விதிகளை மீறினால், அவர்களைக் கைது செய்வதற்கும், சம்பந்தப்பட்ட ஜீப் வண்டிகளுக்கு சஃபாரி சேவைத் தடை விதிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 

எவ்வாறாயினும், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஜீப் வண்டிகள் குறித்து முறையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், அந்த ஜீப் வண்டிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

MOST READ

காணொளி
வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!