Header Logo
Mogo Academy

சினிமா
முதலமைச்சர் விஜயை சந்தித்த நடிகர் சிம்பு!

Jun 16, 2026 - 09:22 AM -

0

முதலமைச்சர் விஜயை சந்தித்த நடிகர் சிம்பு!
Mobitel inner

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருந்து தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். கட்சி ஆரம்பித்து சந்தித்த முதல் தேர்தலிலேயே அதிக இடங்களில் வென்று முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதை இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் பாராட்டினர். 

இதனிடையே, திரைப்பிரபலங்கள் பலரும் தினந்தோறும் முதலமைச்சர் விஜயை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

அப்போது முதலமைச்சருடனான சந்திப்பின் போது எடுத்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

அந்த வகையில், நடிகர் சிலம்பரசன் முதலமைச்சர் விஜயை சந்தித்து பேசியுள்ளார். சந்திப்பின்போது எடுத்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு நெகிழ்ச்சியான தருணத்தையும் பகிர்ந்துள்ளார். 

நடிகர் சிலம்பரசன் கூறியதாவது, 

மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அண்ணாவை சந்தித்தது மகிழ்ச்சி அளித்தது. அவர் தமிழக மக்களுக்கு சேவை செய்யும் போது அவருக்கு வலிமை மற்றும் இறைவனின் ஆசீர்வாதங்கள் கிடைக்க வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார். 

முதலமைச்சர் விஜய் நடிப்பு காலத்தில் சிலம்பரசன் உடன் இணைந்து நடித்ததில்லை என்றாலும் சிலம்பரசனின் பட வெளியீட்டில் ஏற்பட்ட பிரச்சனையில் சிலம்பரசனுக்கு ஆதரவாக இருந்துள்ளார். குறிப்பாக, சிலம்பரசனின் ' வாலு' திரைப்படம் வெளியீட்டில் சிக்கல்களைச் சந்தித்த போது, விஜய் சிலம்பரசன் மற்றும் அவரது தந்தை டி. ராஜேந்தர் ஆகிய இருவருக்கும் தனது ஆதரவை வழங்கினார்.

MOST READ

காணொளி
இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

செம்மணியில் போராட்டக்காரர்களை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

செம்மணியில் போராட்டக்காரர்களை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

செம்மணியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

செம்மணியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

Mobitel Upahara