Header Logo

செய்திகள்
வெள்ளை மாளிகையை இலக்கு வைத்து நடத்தவிருந்த பயங்கரவாதத் தாக்குதல் முறியடிப்பு

Jun 17, 2026 - 09:19 AM -

0

வெள்ளை மாளிகையை இலக்கு வைத்து நடத்தவிருந்த பயங்கரவாதத் தாக்குதல் முறியடிப்பு

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை இலக்கு வைத்து நடத்தவிருந்த தொடர் கொடூரத் தாக்குதல்களை அமெரிக்காவின் எஃப்.பி.ஐ (FBI) நிறுவனம் முறியடித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வெள்ளை மாளிகையில் நடத்தவிருந்த தற்காப்புக் கலை போட்டித் தொடரை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதல்தாரர்கள் வெடிபொருட்களை ஏற்றிய ட்ரோன்களைப் பயன்படுத்தி, இந்தத் தொடரைக் காண வருகை தரும் பெருந்திரளான மக்களை இலக்கு வைத்து கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

கிடைக்கப்பெற்ற உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் களமிறங்கிய பாதுகாப்புப் பிரிவினர், இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன்பாகவே அதனுடன் தொடர்புடைய 5 சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர்.

இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டிருந்த அதே நாளில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் 80ஆவது பிறந்தநாள் கொண்டாட்டமும் அமைந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உப ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் இலோன் மஸ்க் போன்ற முக்கிய பிரமுகர்களே இந்தத் தாக்குதல்தாரர்களின் இலக்காக இருந்ததாக சர்வதேச ஊடகங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

இருப்பினும், அவர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!