Jun 17, 2026 - 09:42 AM -
0
இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் நடிப்பில் கடந்த ஜூன் 4 ஆம் திகதி வெளியான திரைப்படம் ‘பெத்தி’.
ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் பெத்தி திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது.
இந்த நிலையில், பெத்தி திரைப்படம் இந்தியாவில் மட்டும் 223 கோடி ரூபா வசூலை கடந்துள்ளதாக தகவல். முன்னதாக இந்தப் படம் உலகளவில் 315 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து பாக்ஸ் ஆபீஸ் சாதனை படைத்தது.
புச்சி பாபு சனா இயக்கி இருக்கும் இந்தப் படத்தை வெங்கட சதீஷ் கிலாரு சார்பில் ரித்தி சினிமாஸ் தயாரித்துள்ளது. இந்தப் படத்தை இஷான் சக்சேனா மற்றும் ஐவி என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனங்கள் இமைந்து தயாரிக்க மைத்ரி மூவி மேக்க்ர்ஸ் நிறுவம் வழங்கியது.
