Header Logo

செய்திகள்
ஏ-9 வீதியில் கோர விபத்து: இருவர் உயிரிழப்பு

Jun 17, 2026 - 11:16 AM -

0

ஏ-9 வீதியில் கோர விபத்து: இருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியின் பூனாவை, கல்கந்தேகம பகுதியில் இன்று (17) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பூனேவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுரைச்சோலை பகுதியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி மீனவர்கள் குழுவினர் பயணித்த லொறி ஒன்று வீதியில் நிறுத்தப்பட்டிருந்த போது, பின்னால் வந்த உரம் ஏற்றிய மற்றொரு லொறி நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது. 

இந்த மோதலின் போது உரம் ஏற்றிய லொறி மீனவர்கள் இருந்த லொறியின் மீது கவிழ்ந்ததில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்கள் நுரைச்சோலை பகுதியைச் சேர்ந்த 35 மற்றும் 43 வயதுடைய மீனவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், இந்த விபத்தில் மேலும் ஒரு மீனவர் பலத்த காயமடைந்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்த நபரும் சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படும் அதேவேளை, இச்சம்பவம் குறித்து பூனேவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

MOST READ

காணொளி
வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!