Header Logo
Mogo Academy

சினிமா
விஜய் சேதுபதி மகன் சூர்யா எடை குறைத்த சீக்ரெட் இதுதானாம்!

Jun 17, 2026 - 12:35 PM -

0

விஜய் சேதுபதி மகன் சூர்யா எடை குறைத்த சீக்ரெட் இதுதானாம்!
Mobitel inner

12 மாதங்களில் சுமார் 60 கிலோ வரை குறைத்து அசத்தியிருந்தார் நடிகர் விஜய் சேதுபதியின் மகன், சூர்யா சேதுபதி. இது எப்படி என விரிவாக இங்கே பார்க்கலாம் வாங்க, 

தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. வெள்ளித்திரை மட்டுமன்றி தற்போது சின்னத்திரையிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். விஜய் சேதுபதி மட்டுமன்றி அவரது மகன் சூர்யா சேதுபதியும் சினிமாவில் பிரபலம்தான். இவர் நடிப்பில் கடந்த வருடம் ஃபீனிக்ஸ் என்ற படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் படத்திற்காக சுமார் 60 கிலோ வரை குறைத்து அசத்தியிருந்தார் சூர்யா சேதுபதி. இது எப்படி என்பது பற்றித்தான் இன்று பார்க்கப் போகிறோம். 

120 கிலோ எடையில் இருந்த சூர்யா சேதுபதி, ஃபீனிக்ஸ் திரைப்படம் வெளியான சமயத்தில் 62 – 68 கிலோ எடைக்கு குறைந்திருக்கிறார். இதுபற்றி அவரது ட்ரைனர் குறிப்பிடுகையில், “எதிர்பாராத விதமாகத்தான் எங்களின் பயணம் தொடங்கியது. 

ஆனால் இறுதியில் சூர்யாவின் அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் கடின உழைப்புக்கு உண்மையாகவே பலன் கிடைத்துள்ளது” என்று குறிப்பிட்டிருந்தார். 

மேலும், “இந்த எடை இழப்பு பயணத்தில் சூர்யா தன் உடலை மாற்றியமைத்தது மட்டுமல்லாமல், அவரது வாழ்க்கையின் ஒரு புதிய அத்தியாயத்திலும் அடியெடுத்து வைத்துள்ளார். ஆம், இப்போது அவர் ஹீரோவாகி உள்ளார். சூர்யாவின் இந்த வளர்ச்சியின் ஒரு பகுதியாக இருந்ததில் நான் பெருமைப்படுகிறேன். இது வெறும் ஆரம்பம்தான்” என்று குறிப்பிட்டிருந்தார் அந்த ட்ரைனர். 

இந்த அசாத்திய எடை இழப்பை சாத்தியப்படுத்தியது பற்றி பேட்டிகளில் சூர்யா சேதுபதி, “காலை எழுந்தவுடன் ரன்னிங் சென்றுவிடுவேன். அதன்பின் டயட் உணவுமுறை, பின் வொர்க்-அவுட் என்றிருப்பேன். இதற்குப் பின் ஃபீனிக்ஸ் படத்துக்காக தனியாக பயிற்சி எடுத்துக்கொள்வேன். எம்.எம்.ஏ. எனப்படும் கலப்பு தற்காப்புக் கலைகளுக்கான பயிற்சிகளை அந்த சமயத்தில் செய்வேன். அதற்கென தனி மாஸ்டர் உண்டு. அவர்தான் தூங்கும் நேரம், சாப்பிடும் அளவு போன்றவற்றில் ஒழுக்கம் எந்த அளவிற்கு முக்கிய என கற்றுக்கொடுத்தார். அதில்தான் எடை குறைத்தேன்” என்றுள்ளார். 

இருப்பினும் தன்னுடைய பழைய வாழ்க்கையையே தான் விரும்புவதாக பேட்டிகளில் தெரிவித்துள்ளார் சூர்யா சேதுபதி. அதற்கு காரணமாக அவர் சொன்ன விஷயம், “அப்போதுதான் நான் சாப்பிடுவது - படம் பார்ப்பது - என்ஜாய் பண்ணுவது என்றிருந்தேன். இப்போது நிறைய கட்டுப்பாடுகளோடு இருப்பது போல இருக்கிறது” என்றுள்ளார். 

டயட்டை பொறுத்தவரை காய்கறிகள், சிக்கன், மீன், முட்டை போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ள சூர்யா சேதுபதி, “நான் எந்த உணவுக்கும் நோ சொல்வதில்லை. அதேநேரம், அளவில் மிகவும் கவனமாக இருப்பேன்” என்றுள்ளார். 

அந்த வகையில் சூர்யா சேதுபதி போல எடை விஷயத்தில் கட்டுப்பாட்டோடு இருப்பவர்களுக்கு, எடை இழப்பு எப்போதுமே ஈஸிதான்!


MOST READ

காணொளி
செம்மணியில் போராட்டக்காரர்களை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

செம்மணியில் போராட்டக்காரர்களை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

செம்மணியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

செம்மணியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

Mobitel Upahara