Header Logo
SLIC
பல்சுவை
WhatsApp இல் வரும் ‘சீக்ரெட் மெசேஜ்’ Mode!

Jun 17, 2026 - 04:33 PM

WhatsApp இல் வரும் ‘சீக்ரெட் மெசேஜ்’ Mode!
Mobitel Inner 1278
EDEX Inner

ஐபோன் யூசர்களுக்காக 'வியூ ஒன்ஸ்' டெக்ஸ்ட் மெசேஜ் வசதியை வாட்ஸ்அப் கொண்டுவரப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது யூசர்களின் பிரைவசியை இன்னும் பலப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் பிரபலமான மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப், யூசர்களின் பிரைவசியை மேலும் வலுப்படுத்த ஒரு புதிய அம்சத்தை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஐபோன் யூசர்களுக்காக ‘வியூ-ஒன்ஸ்’ (View-Once) டெக்ஸ்ட் மெசேஜ் வசதியை அறிமுகப்படுத்த நிறுவனம் சோதனை செய்து வருவதாகக் தெரிவிக்கப்படுகிறது. இந்த அம்சம் தற்போது உருவாக்கத்தில் இருப்பதால், பீட்டா யூசர்களுக்குக் கூட இன்னும் கிடைக்கவில்லை. 

வாட்ஸ்அப் அப்டேட்களைக் கண்காணிக்கும் 'WABetaInfo' தளம், 'WhatsApp Beta for iOS' பதிப்பு 26.24.10.16 இல் இந்த அம்சத்தின் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளது. ஆனால், இது இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. Apple-ன் TestFlight புரோகிராம் மூலம் பீட்டா அப்டேட்களைப் பெறும் யூசர்களுக்கும் இந்த வசதி இன்னும் வழங்கப்படவில்லை. 

தற்போது வாட்ஸ்அப்பில் போட்டோக்கள், வீடியோக்கள் மற்றும் வாய்ஸ் நோட்ஸ்களை ‘வியூ-ஒன்ஸ்’ முறையில் அனுப்பும் வசதி உள்ளது. அதாவது, பெறுநர் அதை ஒருமுறை மட்டுமே பார்க்கவோ அல்லது கேட்கவோ முடியும். அதன் பிறகு அந்த மீடியா தானாகவே அழிந்துவிடும். இதே கான்செப்டை இப்போது டெக்ஸ்ட் மெசேஜ்களுக்கும் கொண்டுவர வாட்ஸ்அப் திட்டமிட்டுள்ளது. 

இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டால், யூசர்கள் ஒரு டெக்ஸ்ட் மெசேஜை டைப் செய்துவிட்டு, 'Send' பட்டனை நீண்ட நேரம் அழுத்தும்போது 'Send as View Once' என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க முடியும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் அனுப்பப்படும் மெசேஜை, பெறுநர் ஒருமுறை மட்டுமே படிக்க முடியும். மெசேஜைத் திறந்த பிறகு, அதை மீண்டும் பார்க்கவோ, திரும்பப் பெறவோ முடியாது. 

தனிப்பட்ட சாட்கள் மற்றும் குரூப் சாட்கள் இரண்டிலும் இந்த அம்சம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், வாட்ஸ்அப் சேனல்களில் இது கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. மேலும், தற்போதுள்ள வியூ - ஒன்ஸ் மீடியா கோப்புகளுக்குப் பொருந்தும் அதே கட்டுப்பாடுகள் டெக்ஸ்ட் மெசேஜ்களுக்கும் பொருந்தும். 

அதாவது, மெசேஜ்களை காப்பி செய்வது, ஃபார்வர்டு செய்வது, ஷேர் செய்வது, ஸ்கிரீன்ஷாட் எடுப்பது மற்றும் ஸ்கிரீன் ரெக்கார்டு செய்வது போன்றவை தடுக்கப்படும் எனத் தெரிகிறது. 

தற்காலிகமாக தகவல்களைப் பகிர விரும்பும் பலர், இப்போது வியூ-ஒன்ஸ் போட்டோக்களில் டெக்ஸ்ட் எழுதி அனுப்பும் முறையைப் பின்பற்றுகின்றனர். இந்த புதிய அம்சம் வந்தால், அதற்கென ஒரு பிரத்யேக மற்றும் எளிதான வசதி யூசர்களுக்குக் கிடைக்கும். 

எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன், டிஸப்பியரிங் மெசேஜ்கள், வியூ-ஒன்ஸ் மீடியா போன்ற அம்சங்களைத் தொடர்ந்து இந்த புதிய வசதியும் வரும்போது, வாட்ஸ்அப்பின் பிரைவசி பாதுகாப்பு மேலும் வலுப்பெறும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நிறுவனம் இந்த அம்சத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்காக யூசர்கள் காத்திருக்கின்றனர்.


MOST READ

காணொளி
மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

Mobitel 1278