Header Logo

செய்திகள்
ரொனால்டோவுக்கு ஏற்பட்ட ஏமாற்றம்!

Jun 18, 2026 - 05:56 AM -

0

ரொனால்டோவுக்கு ஏற்பட்ட ஏமாற்றம்!

நடப்பு பிஃபா உலகக் கிண்ண கால்பந்து தொடரின் கொங்கோ அணிக்கு எதிரான முதல் போட்டியில் போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் பதிவு செய்யவில்லை. 

அமெரிக்கா, கனடா, மெக்சிகோ போன்ற நாடுகளில் நடைபெறும் இந்த தொடரில் பங்கேற்று விளையாடும் 48 அணிகளும் அதன் முதல் ஆட்டத்தில் விளையாடி உள்ளன. 

பிரிவுக்கு 4 அணிகள் வீதம் மொத்தம் 12 பிரிவுகளாக சுற்றுகள் நடைபெறுகிறது. 

இந்நிலையில் அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ஹியூஸ்டனில் ‘கே’ பிரிவில் உள்ள போர்ச்சுகல் மற்றும் கொங்கோ அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் போர்ச்சுகல் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. 

அதற்கு தகுந்த படியே ஆட்டத்தின் ஆறாவது நிமிடத்தில் ஜோவா நெவாஸ், போர்ச்சுகல் அணிக்காக முதல் கோலை பதிவு செய்தார். தொடர்ந்து கோல் கணக்கை போர்ச்சுகல் கூட்டும் என கருதப்பட்டது. 

ஆனால் இந்த ஆட்டத்தில் கால்பந்து உலகின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடினார். அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆட்ட நேரத்தில் சுமார் 75 சதவீதம் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது போர்ச்சுகல். அதன் மூலம் சுமார் 769 பாஸ்களை களத்தில் மேற்கொண்டது. இதில் மூன்று ஷாட்களை மட்டுமே ஆன் டார்கெட்டில் போர்ச்சுகல் அணி வைத்தது. 

மறுபக்கம் கொங்கோவின் தடுப்பாட்டம் அற்புதமாக இருந்தது. முதல் பாதியின் ஸ்டாப்பேஜ் டைமில் கொங்கோ அணி கோல் பதிவு செய்தது. காங்கோ அணிக்காக விஸ்ஸா அந்த அற்புதத்தை நிகழ்த்தினார். அதன் பின்னர் இரு அணியும் கோல் பதிவு செய்யவில்லை. 

இதனால் ஆட்டம் 1 - 1 என்ற கோல் கணக்கில் சமனிலையில் நிறைவடைந்தது.

MOST READ

காணொளி
வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!