Header Logo

செய்திகள்
4 - 2 என்ற கணக்கில் குரோஷியாவை வீழ்த்திய இங்கிலாந்து!

Jun 18, 2026 - 06:19 AM -

0

4 - 2 என்ற கணக்கில் குரோஷியாவை வீழ்த்திய  இங்கிலாந்து!

23 வது உலகக் கிண்ண கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வருகிறது. 

இதில் டலாஸ் மைதானத்தில் இன்று அதிகாலை 1.30 மணிக்கு நடைபெற்ற 'எல்' பிரிவு போட்டியில் இங்கிலாந்து மற்றும் குரோஷியா அணிகள் களம் கண்டன. 

விறுவிறுப்பாக தொடங்கிய இந்த ஆட்டத்தின் 12 வது நிமிடத்தில் இங்கிலாந்து அணிக்கு பெனால்டி கிக் வழங்கப்பட்டது. இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஹேரி கேன் தனது அணிக்கு கோலை அடித்து அசத்தினார். இதன் காரணமாக போட்டியின் தொடக்கத்திலேயே இங்கிலாந்து அணி 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 

பிறகு ஆட்டத்தின் 36 வது நிமிடத்தில் குரோஷியா அணி தனது முதல் கோலை அடித்தது. இதனால் ஆட்டம் 1 - 1 என்ற கணக்கில் சமன் ஆனது. எனினும், இங்கிலாந்து அணி இந்த நிலையை நீண்ட நேரம் நிலைக்கவிடவில்லை. ஆட்டத்தின் 42 வது நிமிடத்தில் இங்கலாந்து வீரர் டெல்கன் ரைஸ் வழங்கிய அசிஸ்ட்-ஐ சிரியாக பயன்படுத்திக் கொண்ட ஹேரி கன் தனது அணிக்கு கோல் அடித்தார். இதனால் மீண்டும் முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி 2 - 1 என்ற கண்க்கில் ஆதிக்கம் செலுத்தியது. 

எனினும், சற்றும் தொய்வின்றி விளையாடிய குரோஷியா அணி ஆட்டத்தின் 45 ஆவது நிமிடத்தில் தனது 2 ஆவதி கோலை அடிக்க இரு அணிகளும் 2 - 2 என்ற கணக்கில் புள்ளிகள் சமனுக்கு வந்தன. ஆட்டத்தின் முதல் பாதியில் 2 - 2 என்ற கணக்கில் முடிவுக்கு வந்தது. 

இதைத் தொடர்ந்து தொடங்கிய போட்டியின் 2 வது பாதியின் 47 வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி கோல் அடித்தது. 

இதன் மூலம் இங்கிலாந்து அணி 3 - 2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து இரு அணிகளும் வீரர்களை மாற்றி கோல் அடிக்கும் முயற்சியை தீவிரப்படுத்தின. ஆட்டத்தின் 85 வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி மற்றொரு கோல் அடிக்க 4 - 2 என்ற கணக்கில் ஆதிக்கத்தை தொடர்ந்தது. 

ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 - 2 என்ற கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி சார்பில் ஹேரி கேன் 2 கோல்களும், ஜூட் பெல்லிங்ஹாம், மார்கஸ் ராஷ்போர்ட் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.

MOST READ

காணொளி
வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!