Header Logo

செய்திகள்
பாடசாலை விடுதி கட்டமைப்பை மேம்படுத்த 1,008 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

Jun 18, 2026 - 12:03 PM -

0

பாடசாலை விடுதி கட்டமைப்பை மேம்படுத்த 1,008 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

நாடு முழுவதிலும் உள்ள பாடசாலை விடுதி கட்டமைப்பை விரைவாக அபிவிருத்தி செய்வதற்காக 1,008 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

நாட்டின் பாடசாலை கட்டமைப்பில் தற்போதுள்ள 126 விடுதிக் கட்டிடங்கள் பாழடைந்த நிலையில் காணப்படுவதனாலும், அவற்றின் பராமரிப்புப் பணிகள் முறையாக இடம்பெறாமையினாலும், அங்கு தங்கியிருக்கும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கும் வாழ்வாதாரத்திற்கும் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் கண்டறிந்துள்ளது. 

இந்நிலைக்கு விரைவான தீர்வுகளை வழங்கி, விடுதிகளில் தங்கியிருக்கும் பிள்ளைகளுக்குத் தரமான கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்புமிக்க சூழலை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். 

இதற்கமைய, குறித்த விடுதிகளில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் அத்தியாவசிய வசதிகளை 2 ஆண்டுகளுக்குள் விரைவாக நவீனமயமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த விசேட திட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.

MOST READ

காணொளி
வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!