Header Logo
SLIC
பல்சுவை
பச்சை கேரட் அல்லது கேரட் ஜூஸ் - உடல் நலத்திற்கு எது சிறந்தது?

Jun 18, 2026 - 01:57 PM

பச்சை கேரட் அல்லது கேரட் ஜூஸ் - உடல் நலத்திற்கு எது சிறந்தது?
Mobitel Inner 1278
EDEX Inner

இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், மற்றும் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது. 

 

குறைந்த கலோரி கொண்ட இந்த காய்கறி எடையைக் கட்டுப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும் பெரிதும் உதவுகிறது. 

கண்களை கவரும் ஆரஞ்சு நிறத்தில் காணப்படும் கரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A, வைட்டமின் B6, வைட்டமின் K1, பையோடின் போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை இரத்த அழுத்தத்தை குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் தருகிறது. 

மேலும் இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், மற்றும் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது. குறைந்த கலோரி கொண்ட இந்த காய்கறி எடையைக் கட்டுப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும் பெரிதும் உதவுகிறது. 

ஆரோக்கியத்திற்கு அவசியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறியில் ஒன்றான இதை பலர் தங்கள் உணவில் பச்சையாகவும், சாறாகவும் போட்டு தவறாமல் உட்கொள்கிறார்கள். ஆனால், கரட்டை பச்சையாக சாப்பிடுவதா அல்லது ஜூஸ் அடித்து குடிப்பதா என்ற சந்தேகம் உள்ளது. மேலும் எது ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்றும் பலர் இப்போது கேட்கிறார்கள். எனவே இரண்டின் ஆரோக்கிய நன்மைகளையும் இங்கே ஆராய்வோம். 

பச்சை கரட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் : தினமும் சாப்பிடக்கூடிய காய்கறிகளில் கேரட்டும் ஒன்றாகும். அவற்றில் உள்ள தாதுக்களும் ஊட்டச்சத்துக்களும் நமது உடலுக்கு மிகவும் அவசியமானவை. கரட்டில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகளைத் தூண்டுகிறது. 

மேலும், கரட்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்தில் ஏற்படும் கறைகளைக் குறைக்க உதவுகின்றன. கரட்டில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை எளிதாக்கி மலச்சிக்கலை நீக்குகிறது. உடலில் இரத்த சர்க்கரை அளவைப் பராமரிக்கவும் கரட் உதவுகிறது. 

கரட் பொட்டாசியம் சத்து நிறைந்த ஒரு காய்கறியாகும். எனவே கரட் நமது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. 

கரட்டில் உள்ள பீட்டா - கரோட்டின் மற்றும் லைக்கோபீன் ஆகியவை நமது சருமத்தின் அழகை பராமரிக்க உதவுகின்றன. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளக்கூடிய ஒரு காய்கறியாகவும் கேரட் உள்ளது. 

கரட் ஜூஸின் ஆரோக்கிய நன்மைகள் : கேரட் ஜூஸில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ ஏராளமாக உள்ளது. இது உங்கள் உடலில் உள்ள செல்கள் சேதமடைவதைத் தடுக்கிறது மற்றும் தொற்று நோய்களைத் தடுக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 

கரட் சாற்றில் பச்சை கரட்டை விட பீட்டா கரோட்டின் அதிகமாக உள்ளது. இருப்பினும், கேரட் ஜூஸ் அதிகமாக குடிப்பது கரோட்டினீமியா என்ற நிலையை ஏற்படுத்தும். இரத்தத்தில் பீட்டா கரோட்டின் அளவு அதிகரிப்பதால் தோல் மஞ்சள் நிறமாக மாறும் நிலை இதுவாகும்.


MOST READ

காணொளி
மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

Mobitel 1278