Header Logo

செய்திகள்
மீட்பு புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்கவகையின்மை சட்டமூலத்தை சான்றுரைப்படுத்திய சபாநாயகர்

Jun 18, 2026 - 03:01 PM -

0

மீட்பு புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்கவகையின்மை சட்டமூலத்தை சான்றுரைப்படுத்திய சபாநாயகர்

மீட்பு புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்கவகையின்மை (கூட்டிணைப்பு மற்றும் தனிப்பட்ட) சட்டமூலத்தில் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தனது கையொப்பத்தையிட்டு நேற்று (17) சான்றுரைப்படுத்தினார். 

இச்சட்டமூலம் 2026.03.17ஆம் திகதி முதலாவது மதிப்பீட்டிற்காகப் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டதுடன், 2026.05.06ஆம் திகதி இது விவாதத்திற்கு எடுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. 

இதன் ஊடாக மீட்பு, புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்கவகையின்மை (கூட்டிணைப்பு மற்றும் தனிப்பட்ட) சட்டம், 2007ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க கம்பனிகள் சட்டம், 2017ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க உண்ணாட்டரசிறைச் சட்டம் மற்றும் 1988ஆம் ஆண்டின் 72ஆம் இலக்க மத்தியஸ்த சபைகள் சட்டம் என்பன திருத்தப்படுவதுடன், கடனிறுக்கவகையின்மை (97வது அத்தியாயம்) கட்டளைச் சட்டத்தை நீக்குகிறது. 

இந்தச் சட்டம், கடனாளியின் நியாயமான வருமானம் மற்றும் அத்தியாவசிய சொத்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, கடன் பாதுகாப்பு, தற்காலிக விடுப்பு மற்றும் மறுசீரமைப்பு விதிகள் போன்ற தனிநபர் கடனிறுக்கவகையின்மை குறிப்பிட்ட நடைமுறைகளையும் உள்ளடக்கியுள்ளது. 

மேலும், கடன் சந்தையின் முன்கணிப்புத்தன்மையை மேம்படுத்துவதற்காக, இந்தச் சட்டமூலம் பெருநிறுவன நிர்வாகம், நிர்வாகப் பொறுப்பு ஏற்பு மற்றும் எல்லை தாண்டிய கடனிறுக்கவகையின்மை போன்ற விடயங்களையும் உள்ளடக்கியுள்ளது. 

மேலும், இந்தச் சட்டம் நேர்மையான தனிநபர் கடன் வாங்குபவர்களுக்கு ஒரு புதிய தொடக்கத்தையும், இயங்கக்கூடிய நிலையில் உள்ள நெருக்கடியில் உள்ள வணிகங்களை மறுவாழ்வு அளிப்பதற்கான ஒரு கட்டமைக்கப்பட்ட வழிமுறையையும் வழங்க முற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கமைய, மீட்பு புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்கவகையின்மை (கூட்டிணைப்பு மற்றும் தனிப்பட்ட) சட்டமூலம், 2026ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க மீட்பு புனர்வாழ்வு மற்றும் கடனிறுக்கவகையின்மை (கூட்டிணைப்பு மற்றும் தனிப்பட்ட) சட்டமாக அமுலுக்கு வருகிறது.

MOST READ

காணொளி
வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!