Header Logo

செய்திகள்
3 கோடி பெறுமதியான சிகரெட்டுக்களுடன் 13 பேர் கைது

Jun 18, 2026 - 04:03 PM -

0

3 கோடி பெறுமதியான சிகரெட்டுக்களுடன் 13 பேர் கைது

3 கோடியே 18 இலட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான வெளிநாட்டு தயாரிப்பு சிகரெட்டுக்களுடன் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த சிகரெட் தொகையை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் பிரகடனப்படுத்துவதற்கு எதுவுமில்லை என்ற 'பச்சை வழி' ஊடாக கடத்திச் செல்ல முற்பட்ட 13 வெளிநாட்டு விமானப் பயணிகளே இன்று (18) அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்கள் அனைவரும் சீன நாட்டு வர்த்தகர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இவர்கள் இன்று அதிகாலை 4 மணியளவில் மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலிருந்து, மலேசிய எயார்லைன்ஸின் MH-179 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். 

இதன்போது, அவர்கள் கொண்டு வந்த பயணப் பொதிகள் மற்றும் தேயிலை அடங்கிய பெட்டிகளுக்குள், சீனாவில் தயாரிக்கப்பட்ட 212,600 சிகரெட்டுகளைக் கொண்ட 1,063 சிகரெட் பெட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. 

கைது செய்யப்பட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளின் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

MOST READ

காணொளி
வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!