Header Logo

செய்திகள்
உலக கிண்ண கால்பந்தாட்டம் - கட்டாரை வீழ்த்தி கனடா ஆதிக்கம்

Jun 19, 2026 - 05:49 AM -

0

உலக கிண்ண கால்பந்தாட்டம் - கட்டாரை வீழ்த்தி கனடா ஆதிக்கம்

உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரின் 'பி' பிரிவு போட்டியில், கட்டார் அணியை 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கனடா அணி ஆதிக்கத்தை செலுத்தியது. 

ஆட்டத்தின் விறுவிறுப்பான இரண்டாம் பாதியில் கட்டார் அணியின் வீரர்களின் எண்ணிக்கை குறைந்ததைத் தமக்கு சாதமாக மாற்றி கனடா அணி இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது. 

போட்டியில் ஜொனாதன் டேவிட் ஹட்ரிக் கோல் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார். 

கத்தார் அணியின் தற்காப்புப் பிழைகள் மற்றும் பலவீனமான தடுத்தல் ஆட்டத்தை அவர் தொடர்ந்து தமக்கு சாதகமாக்கிக் கொண்டார். 

ஒரு நேரிடி சிகப்பு அட்டை மற்றும் வி.ஏ.ஆர் பரிசோதனைக்கு பிறகு கட்டார் அணி முதலில் 10 வீரர்களாகவும், பின்னர் 9 வீரர்களாகவும் குறைந்ததே இப்போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது. 

அந்த நொடியிலிருந்து போட்டி முற்றிலும் கனடாவின் வசம் வந்த நிலையில், ஜெஸ்ஸி மார்ஷ் தலைமையிலான கனடா அணி 6க்கு 0 என்ற கணக்கில் இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது.

MOST READ

காணொளி
வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!