Header Logo

செய்திகள்
யாழில் தங்க கடத்தலில் ஈடுபட்ட 8 பேரும் தடுப்பு காவலில்

Jun 19, 2026 - 12:00 PM -

0

யாழில் தங்க கடத்தலில் ஈடுபட்ட 8 பேரும் தடுப்பு காவலில்

யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் எதிர்வரும் திங்கட்கிழமை வரையில் சுங்க திணைக்கள அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

காங்கேசன்துறையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு நேற்று முன்தினம் பயணிக்கவிருந்த பயணிகளில் இரண்டு இந்திய பிரஜைகளிடம் இருந்து தலா 100 கிராம் அளவிலான தங்க கட்டிகள் மீட்கப்பட்டன. 

அதனை தொடர்ந்து பயணிகளை சோதனைக்கு உட்படுத்திய போது, சந்தேகத்தின் அடிப்படையில் மேலும் 26 பயணிகளை சுங்க திணைக்கள அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். 

இவ்வாறு தடுக்கப்பட்டிருந்த 26 பேரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த சுங்க திணைக்கள அதிகாரிகள் அவர்களை ஸ்கேன் பரிசோதனை செய்வதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர். 

அதன்போது அவர்களில் 6 பேரின் உடலினுள் தங்க கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டது. 

இந்நிலையில் குறித்த 6 பேரையும் தமது காவலில் எடுத்த சுங்க திணைக்கள அதிகாரிகள், ஏனைய 20 பேரையும் விசாரணைகளின் பின்னர் விடுவித்தனர். 

இது தொடர்பில் மல்லாகம் நீதவான் நீதிமன்றிற்கு நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், சந்தேகநபர்களை எதிர்வரும் திங்கட்கிழமை வரை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. 

கைதான 8 பேரில், ரு இலங்கை பெண்களும் 6 இந்திய ஆண்களும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

--

MOST READ

காணொளி
வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!