Header Logo

செய்திகள்
சமிந்த குலரத்னவின் மனு ஜூலையில் விசாரணைக்கு

Jun 19, 2026 - 01:07 PM -

0

சமிந்த குலரத்னவின் மனு ஜூலையில் விசாரணைக்கு

தம்மை பணிநீக்கம் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானம் சட்டத்திற்கு முரணானது எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி, பாராளுமன்ற பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவினால் சபாநாயகர் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 20 ஆம் அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த மனு இன்றைய தினம் (19) தலைவர் நீதியரசர் ரொஹான்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரைக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஆயத்தின் முன்னிலையில் அழைக்கப்பட்டது. 

இதன்போது மனுதாரர் தரப்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், இந்த மனு தொடர்பான காரணங்களை உறுதிப்படுத்துவதற்குத் தாம் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார். 

அதேவேளை, குறித்த மனுவின் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ள சபாநாயகர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி கே. கணக-ஈஸ்வரன் நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், இந்த மனுவைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்துத் தாம் நீதிமன்றத்தில் ஆரம்பகட்ட ஆட்சேபனைகளை முன்வைப்பதாகத் தெரிவித்தார்.

குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது

MOST READ

காணொளி
வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!