Header Logo

செய்திகள்
கைதான லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளருக்கு பிணை

Jun 19, 2026 - 04:18 PM -

0

கைதான லங்கா உப்பு நிறுவன பொது முகாமையாளருக்கு பிணை

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட லங்கா உப்பு நிறுவனத்தின் தற்போதைய பொது முகாமையாளர் ரத்நாயக்க முதியன்சேலாகே குணரத்னவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (19) உத்தரவிட்டுள்ளது. 

இதன்படி, சந்தேகநபரை தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல உத்தரவிட்ட கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, சந்தேகநபருக்கு வெளிநாட்டுப் பயணத்தடையும் விதித்து உத்தரவிட்டார். 

சந்தேகநபரின் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் நீதவான் இதன்போது உத்தரவிட்டார். 

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை சமர்ப்பிக்கையில், கொள்முதல் செயல்முறைக்கு புறம்பாக ஹம்பாந்தோட்டை உப்பு நிறுவனத்திற்கு பொதியிடல் பொருட்களைக் கொள்வனவு செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு 14,300,000 ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி, இந்த சந்தேகநபரை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இன்று காலை கைது செய்திருந்ததாகத் தெரிவித்தனர்.

குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது

MOST READ

காணொளி
வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!