Header Logo
Mogo Academy

சினிமா
திரிஷாவுக்கு நன்றி - ரஜினிக்கு திட்டு!

Jun 23, 2026 - 01:31 PM -

0

திரிஷாவுக்கு நன்றி - ரஜினிக்கு திட்டு!
Mobitel inner

விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற பின்னர், நேற்று (22) தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரிஷா மற்றும் ரஜினி வாழ்த்து சொல்லாததற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த விஜய், தற்போது சினிமாவை விட்டு விலகி அரசியலுக்கு வந்துவிட்டார். அவர் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று தமிழ்நாட்டின் முதல்வராகவும் அரியணை ஏறிவிட்டார். அவர் முதல்வரான பின் நேற்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார். 

அவர் முதல்வர் ஆன பின் கொண்டாடிய முதல் பிறந்தநாள் என்பதால், தமிழ்நாடு முழுக்க பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி தமிழக வெற்றிக் கழகத்தினர் தடபுடலாக கொண்டாடி மகிழ்ந்தனர். 

அதுமட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என ஏராளமானோர் சமூக வலைதளம் மூலமாக முதல்வருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதுதவிர நேற்று முதல்வர் சட்டமன்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டதால், அங்கிருந்த எம்.எல்.ஏக்கள், எதிர்க்கட்சியினர் ஆகியோரும் முதல்வரை மனதார வாழ்த்தினர். 

இப்படி ஏராளமானோர் வாழ்த்தினாலும் தமிழ்நாடே எதிர்பார்த்தது இருவரின் வாழ்த்துக்களை தான். ஆனால் அந்த இருவருமே நேற்று வாழ்த்துக்களை தெரிவிக்கவில்லை. 

அதில் ஒருவர் நடிகை திரிஷா. விஜய் பிறந்தநாளுக்கு நடிகை திரிஷா போடும் வாழ்த்துப் பதிவுகள் கடந்த சில ஆண்டுகளாக சர்ச்சையை ஏற்படுத்தின. அதனால் இந்த ஆண்டு என்ன பதிவு போட்டு பரபரப்பை கிளப்பப் போகிறாரோ என்கிற பயத்திலேயே விஜய் ரசிகர்கள் இருந்தனர். 

ஆனால் அவர்களை மகிழ்விக்கும் விதமாக எந்த ஒரு பதிவும் போடாமல் இருந்துள்ளார் திரிஷா. தன்னுடைய பதிவால் முதல்வர் விஜய் எந்த விமர்சனத்திலும் சிக்கிவிடக் கூடாது என்கிற அக்கறையில் திரிஷா பதிவு போடவில்லை என கூறப்படுகிறது. அவர் பதிவு போடாததால் அவருக்கு விஜய் ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். 

மறுபுறம் விஜய்யின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்காத மற்றொரு பிரபலம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான். விஜய் முதல்வர் ஆனதில் இருந்தே ரஜினி மீதும் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக திமுக, அதிமுக கூட்டணிக்கு ரஜினி பேச்சுவார்த்தை நடத்தினார் என்றெல்லாம் பேச்சுக்கள் அடிபட்டது. 

ஆனால் அதெல்லாம் உண்மையில்லை என்று ரஜினியே பிரஸ்மீட் வைத்து விளக்கம் அளித்தார். இந்த நிலையில், விஜய்யின் பிறந்தநாளுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவிக்காமல் மெளனமாக இருந்ததால் அவரை நெட்டிசன்கள் வறுத்தெடுக்கின்றனர்.


MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara