Header Logo
SLIC
பல்சுவை
சீனாவில் நடுத்தெருவில் மண்டியிட்டு யாசகம் பெறும் ரோபோ!

Jun 23, 2026 - 05:16 PM

சீனாவில் நடுத்தெருவில் மண்டியிட்டு யாசகம் பெறும் ரோபோ!
Mobitel Inner 1278
EDEX Inner

சீனாவில் பேட்டரியை சார்ஜ் செய்துகொள்ளப் பணமில்லை என்று கூறி, ரோபோ ஒன்று நடுத்தெருவில் மண்டியிட்டுப் பிச்சை எடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. 

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் Unitree என்ற நிறுவனம் தயாரித்த G1 ரக மனித உருவ ரோபோ கைகளை கூப்பி பிச்சை கேட்பது அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. 

அதன் முன்னால் பணம் போடுவதற்கான ஒரு தட்டும், டிஜிட்டல் முறையில் பணம் அனுப்புவதற்காக ஒரு QR Code-ம் வைக்கப்பட்டுள்ளது. 

"என்னுடைய பேட்டரியை ரீசார்ஜ் செய்யப் பணமில்லை. தயவுசெய்து பவர் ரீசார்ஜ் பில்களைக் கட்ட உதவுங்கள்" என ரோபோவில் உள்ள ஸ்பீக்கர் மூலம் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கிறது. 

அந்த வழியாகச் செல்லும் பொதுமக்கள் சிலர் வியப்புடன் பணம் போடுவதும், மொபைல் மூலம் பணம் அனுப்புவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. 

இந்த விசித்திர சம்பவம் சிச்சுவானில் மட்டுமன்றி, சீனாவின் முக்கிய நகரங்களான செங்டூ, பெய்ஜிங், குவாங்சோ போன்ற பகுதிகளிலும் இடம்பெற்றுள்ளது. 

இந்திய மதிப்பில் சுமார் 13 லட்சம் ரூபா மதிப்புள்ள இந்த அதிநவீன ரோபோக்கள் இப்படி வீதியில் நின்று பிச்சை எடுப்பது பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.

MOST READ

காணொளி
மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

Mobitel 1278