Header Logo
Mogo Academy

சினிமா
ஓடிப்போய்டலாம்னு திட்டம் போட்டோம்!

Jun 24, 2026 - 12:29 PM -

0

ஓடிப்போய்டலாம்னு திட்டம் போட்டோம்!
Mobitel inner

மலையாள திரையுலகத்தில் நடிப்பு பயணத்தை ஆரம்பித்து தமிழில் ரஜினி முருகன் படத்தின் வெற்றியின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இதனை தொடர்ந்து, விஜய், விஷால், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமான கீர்த்தி தற்போது பாலிவுட்டிலும் கலம் கண்டு வருகிறார். 

தெறி படத்தின் இந்தி ரீமேக்கான பேபி கான் படத்தில் நடித்து பாலிவுட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். கடந்த 2024 இல் ஆண்டனி தட்டிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், என்னுடைய குடும்பத்தினருடன் ஒரு ஓட்டலுக்கு நான் சாப்பிடச் சென்றிருந்தேன். தற்செயலாக ஆண்டனியும் அதே ஓட்டலுக்கு வந்திருந்தார். என்னைச் சுற்றி உறவினர்கள் ஏகப்பட்ட பேர் இருந்ததால், என்னால் அவரிடம் நேராக சென்று பேச முடியவில்லை. அதனால், நான் அவரை பார்த்து மெதுவாக ஒரு கண்ணசைத்து அங்கிருந்து கிளம்பிவிட்டேன். அதன்பின் தான் ஆண்டனிக்கு நான் ஒரு சவால் விட்டேன். 

உனக்கு தைரியம் இருந்தால் என்னிடம் வந்து காதலை சொல் என்றேன். அந்த சவாலுக்குப்பின் ஒரு வழியாக அவர் 2010 இல் என்னிடம் காதலை சொன்னார். அதன்பின் எங்கள் காதலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க 15 ஆண்டுகளாகிவிட்டது. நாங்கள் இருவரும் காதலிக்கும்போது, ஆண்டனி எனக்கு ஒரு மோதிரத்தை பரிசளித்தார். இந்த மோதிரத்தை நான் இதுவரை கழற்றியதே இல்லை. 

என் பல படங்களில்கூட மோதிரம் என் கையில் இருக்கும். என்னைவிட என் கணவர் 7 வயது மூத்தவர். ஆரம்பத்தில் அவர் கத்தாரில் கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் வேலை பார்த்தார். அந்த காலக்கட்டத்தில் நாங்கள் பார்த்துக்கொண்டதே இல்லை. எப்போதாவது தான் அவரிடம் பேச வாய்ப்பு கிடைக்கும், ஆனால் இருவரும் காதலில் உறுதியாக இருந்தோம். ஒரு கட்டத்தில் எங்கள் வீட்டில் காதலை ஒத்துக்கொள்ள மாட்டார்களோ என்று பயம் வந்தது. 

அதனால் இருவரும் வீட்டைவிட்டு ஓடிப்போய்விடலாமா என்று திட்டம் போட்டோம். அதை இப்போது நினைத்துப் பார்த்தால்கூட சிரிப்பாக இருக்கிறது. ஆனால் எங்கள் காதலை உறுதியாக்கியது கொரானா லாக்டவுன் தான். ஆண்டனிக்கு என்னை மாதிரி ஒரு பொண்ணு கிடைச்சது அவரோட அதிர்ஷ்டம்னு எல்லாரும் சொல்றாங்க, ஆனால் உண்மையை சொல்லனும்னா அவரை கணவரா அடைய நான் தான் ரொம்ப கொடுத்து வச்சவள் என்று கீர்த்தி சுரேஷ் ஓபனாக பேசியிருக்கிறார்.


MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

Mobitel Upahara