Header Logo

விளையாட்டு
பிரேசில் அபார வெற்றி - நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய மொராக்கோ!

Jun 25, 2026 - 07:31 AM -

0

பிரேசில் அபார வெற்றி - நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய மொராக்கோ!

உலகக் கிண்ண கால்பந்து தொடரில் ஸ்காட்லாந்து அணியை 3 - 0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி பிரேசில் வெற்றி பெற்றது. 

23 ஆவது உலகக் கிண்ண கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வருகின்றன. இதில் மியாமி ஸ்டேடியத்தில் (இந்திய நேரப்படி) இன்று அதிகாலை 3.30 மணிக்கு நடைபெற்ற 'சி' பிரிவு லீக் ஆட்டத்தில் பிரேசில் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் விளையாடின. 

இதில், போட்டியின் 7 ஆவது நிமிடத்தில் பிரேசில் அணிக்காக, வினிசியஸ் ஜூனியர் முதல் கோலை அடித்தார். 1-0 புள்ளி கணக்கில் அந்த அணி முன்னிலையில் இருந்தது. அதன்பின்னர், முதல் பாதியின் இறுதி வரை கோல் அடிக்கப்படவில்லை. 

2 ஆவது பாதியின் 3 ஆவது நிமிடத்தில் 48 ஆவது நிமிடத்தில் வினிசியஸ் ஜூனியர் மற்றொரு கோலை அடித்ததன் மூலம் 2-0 என்ற புள்ளி கணக்கில் பிரேசில் வெற்றியை நோக்கி சென்றது. தொடர்ந்து 60 ஆவது நிமிடத்தில் மேத்யூஸ் குன்ஹா 3 ஆவது கோலை அடித்தார். 

போட்டியின் முடிவில் ஸ்காட்லாந்து அணியை 3 - 0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி பிரேசில் வெற்றி பெற்றது. 

இதனை தொடர்ந்து, குரூப் சி பிரிவின் பரபரப்பான போட்டியில் மொராக்கோ அணி 4 - 2 என்ற கோல் கணக்கில் ஹைட்டியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஆப்பிரிக்க கண்டத்திலிருந்து அடுத்த சுற்றுக்கு (Knockouts) தகுதி பெற்ற முதல் அணியாக மொராக்கோ சாதனை படைத்துள்ளது. 

அட்லாண்டா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் தொடக்கம் முதலே அதிரடி காட்டின. ஆட்டத்தின் 10 ஆவது நிமிடத்தில் மொராக்கோ அணியின் யாசின் பூனோ ஒரு ஓன் கோல் (Own Goal) அடிக்க, ஹைட்டி 1-0 என முன்னிலை பெற்றது. எனினும், 39 ஆவது நிமிடத்தில் மொராக்கோவின் நட்சத்திர வீரர் அஷ்ரஃப் ஹக்கிமி ஒரு அபார கோல் அடித்து சமன் செய்தார். 

அடுத்த சில நிமிடங்களில் ஹைட்டியின் வில்சன் இசிடோர் கோல் அடிக்க, முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் மொராக்கோவின் இஸ்மாயில் சைபாரி மீண்டும் ஆட்டத்தைச் சமன் செய்தார். இதனால் முதல் பாதி 2-2 என முடிந்தது. 

இரண்டாவது பாதியில் மொராக்கோவின் ஆட்டம் முற்றிலும் மாறியது. 78 ஆவது நிமிடத்தில் சுஃப்யான் ரஹீமி கோல் அடித்ததன் மூலம் 3-2 என முன்னிலை பெற்றது. 

மேலும், 89 ஆவது நிமிடத்தில் மற்றொரு மாற்று வீரரான கெஸைம் யாசின் கோல் அடித்து மொராக்கோவின் வெற்றியை 4-2 என உறுதி செய்தார்.

MOST READ

காணொளி
வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!