Header Logo
SLIC
உலகம்
பிரான்ஸில் 40 பேர் நீரில் மூழ்கி பலி!

Jun 25, 2026 - 07:42 AM

பிரான்ஸில் 40 பேர் நீரில் மூழ்கி பலி!
Mobitel Inner 1278
EDEX Inner

பிரிட்டன், இத்தாலி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் வெப்பநிலை கடுமையாக உயர்ந்து வருகிறது. 

வரலாறு காணாத வெப்ப அலை காரணமாகப் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஈபிள் கோபுரம் உட்பட அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன. 

உலக சராசரியை விட இரண்டு மடங்கு அதிகமான வெப்ப அலையால் ஐரோப்பா தத்தளித்து வருவதாக உலக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கடந்த 23 ஆம் திகதி பிரான்சில் 44.3 டிகிரி செல்சியஸ் என்ற சாதனை அளவிலான அதிகபட்ச வெப்பநிலை பதிவானது. 

அங்குள்ள 58 மாகாணங்களுக்கு நேற்று (24) சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வெப்பத்திலிருந்து தப்பிக்க மக்கள் ஆறுகளிலும் நீர்நிலைகளிலும் குளித்து நேரத்தை கழித்து வருகின்றனர். 

இந்நிலையில் கடந்த வாரத்தில் மட்டும் பிரான்ஸ் வெவ்வேறு இடங்களில் வெப்பத்திலிருந்து தப்பிக்க நீர்நிலைகளில் இறங்கிய மக்களில் 40 பேர் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு அறிவித்துள்ளார். 

இதில் பெரும்பாலானோர் இள வயதினர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

கடந்த 4 ஆண்டுகளில் ஐரோப்பா முழுவதும் வெப்பம் தொடர்பான காரணங்களால் 200,000 மக்கள் உயிரிழந்துள்ளதாகவும் அதில் பெரும்பாலானவற்றை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் தடுத்திருக்க முடியும் எனவும் ஐரோப்பாவில் உள்ள உலக சுகாதார அமைப்பு அலுவலகம் இந்த மாதம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

Mobitel 1278