Jun 26, 2026 - 08:15 AM -
0
தமிழ்நாட்டில் உள்ள அரச வைத்தியசாலைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை வழங்க தமிழக முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுத்துள்ளார்.
தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டதைப் போல, ஆட்சிக்கு வந்த 43 வது நாளில் அதற்கான வர்த்தமானி அறிவித்தலையும் அவர் வௌியிட்டுள்ளார்.
இதன்படி தமிழகத்தில் உள்ள அரச வைத்தியசாலைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும், ஒரு கிராம் நிறையுடைய தங்கமோதிரம் தாய்மாமன் தங்கமோதிர திட்டத்தின் ஊடாக வழங்கப்படவுள்ளது.
தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களை சேர்ந்த தாய்மார்கள் இந்த திட்டத்திற்கு உள்வாங்கப்படுவதுடன் அவர்கள் அரச வைத்தியசாலைகளில் எத்தனை பிள்ளைகளை பெற்றாலும் இந்த மோதிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஆண்டுக்கு 755.83 கோடி இந்திய ரூபாவை செலவிடுவதற்கு தமிழக அரசு தீர்மானித்துள்ளது.
அரச வைத்தியசாலைகளிலேயே தங்க மோதிரங்கள் இருப்பு வைக்கப்படும்.
ஆண், பெண் பாகுபாடின்றி இரு பாலின குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது.
இந்த திட்டம் அறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் கடந்த 22-ஆம் திகதி நிறைவடைந்த தமிழக முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாள் முதல், பிறக்கும் அனைத்து குழந்தைகளும் இந்த தங்க மோதிரம் திட்டத்தில் உள்வாங்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

