Header Logo

செய்திகள்
அகலவத்தை பிரதேச சபையின் உப தவிசாளர் இராஜினாமா!

Jun 26, 2026 - 03:35 PM -

0

அகலவத்தை பிரதேச சபையின் உப தவிசாளர் இராஜினாமா!

அகலவத்தை பிரதேச சபையின் உப தவிசாளராகப் பணியாற்றிய இந்திக ஜயலத் தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார். 

தனது முடிவிற்கான காரணங்களைக் குறிப்பிட்டு, சபைத் தவிசாளருக்கு கடிதம் ஒன்றையும் கையளித்துள்ளார்.

அகலவத்தையின் நகரத் திட்டமிடல் தோல்வியடைந்தமை, அகலவத்தையில் நீதிமன்றக் கட்டடத் தொகுதியைக் கொண்டு வருவதற்கு மற்றும் புதிய பொலிஸ் நிலையத்திற்கு இடவசதி வழங்காமை, யடியன பிரதேசத்தில் வர்த்தக நிலையத்தை அமைப்பதில் தோல்வி, அனர்த்த முகாமைத்துவக் கட்டடத்தை அகற்றாமை உள்ளிட்ட பல காரணங்களை அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், நிதி மற்றும் கொள்கைக் குழு மற்றும் தொழில்நுட்பச் சேவைக் குழு ஆகியவற்றிலிருந்தும் விலகுவதாக அவர் அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார். 

"எனக்கு மக்களின் ஆணை கிடைத்தது ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினரிடமிருந்தே. அவர்களின் வியர்வை மற்றும் கண்ணீர் மூலம் நான் வந்த இந்தப் பயணத்தில், அவர்களுக்காக என்னால் எந்த மாற்றத்தையும் செய்ய முடியாவிட்டால், பதவியை மட்டும் இறுகப் பற்றிக்கொண்டு இருப்பது பாவமாகும். 

இந்தச் சூழலை சாபக்கேடாக மாற்ற எனக்கு விருப்பமில்லை என்பதால், இந்தத் தருணத்தில் உப தவிசாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்கிறேன். எனவே, இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், அகலவத்தை பிரதேச சபையின் உப தவிசாளர் பதவியிலிருந்து நான் இராஜினாமா செய்கிறேன்" என்று அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!