Jun 26, 2026 - 08:11 PM -
0
முல்லைத்தீவு மாவட்டம், துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்விளான் கிராம அலுவலர் பிரிவில், கல்விளான் குளத்தில் மூழ்கி 26 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கல்விளான் பகுதியைச் சேர்ந்த 26 வயதான இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று (25) பிற்பகல் சுமார் 3.00 மணியளவில் தூண்டில் சகிதம் மீன்பிடிக்கச் சென்ற குறித்த இளைஞர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனையடுத்து, அவரைத் தேடிச் சென்ற தந்தையாருக்கு, இன்று (26) காலை அவர் குளத்தில் சடலமாக மிதப்பது தெரியவந்தது.
உயிரிழந்த இளைஞருக்கு வலிப்பு நோய் இருந்ததாகக் கூறப்படுகிறது. மீன்பிடிக்கச் சென்ற வேளையில் அவருக்கு வலிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும், அதன் காரணமாகவே அவர் குளத்தில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளைத் துணுக்காய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
--

