Jun 28, 2026 - 02:01 PM -
0
பொலிவுட் நடிகை ஷர்வரி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானிடம் இருந்து வந்த ஒரு மெசேஜ் தம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதாக தெரிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகை ஷர்வரி. இவர் தற்போது 'மேயின் வாபஸ் ஆவுங்கா' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இயக்குநர் இம்தியாஸ் அலி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ள இப்படம் கடந்த 12-ம் திகதி வெளியானது.
இந்த படத்தில் ஷர்வரியின் நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்த நிலையில், இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின்போது, அளித்த ஒரு பேட்டியில், ஏ.ஆர்.ரகுமானுடன் நடந்த மறக்க முடியாத அனுபவத்தை ஷர்வரி பகிர்ந்துகொண்டார்.
"ஏ.ஆர்.ரகுமான் சார் சில நாட்களுக்கு முன்பு எனக்கு ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தார். இப்படத்திற்கு இசையமைத்தது அவருக்கு மிகவும் பிடித்திருந்ததாக அதில் குறிப்பிட்டிருந்தார்.
அவரிடமிருந்து இப்படியொரு மெசேஜ் வரும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.
மிகுந்த உற்சாகத்தில், நான் அவருக்கு எவ்வளவு பெரிய ரசிகை என்பதை விளக்கி, ஒரு பெரிய கட்டுரையையே பதிலாக அனுப்பிவிட்டேன் என குறிப்பிட்டிருந்தார்.

